இத்தோடு எல்லாத்தையும் நிறுத்துங்க... வைகோவை அதட்டிய தமிழிசை...!

By vinoth kumarFirst Published Aug 4, 2019, 2:25 PM IST
Highlights

தமிழகத்தை நாகசாகி, ஹிரோஷிமாவுடன் ஒப்பிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை வைகோவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழகத்தை நாகசாகி, ஹிரோஷிமாவுடன் ஒப்பிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை வைகோவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வருகிற நாளை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெறும். வேலூர் மக்களவை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி. சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.  இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது. 

வேலூர் தொகுதியில் நேற்று இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அவர் பேசுகையில்,  தேர்தல் கூட்டத்தில் பேசிய வைகோ, பாஜக அரசுக்கு பாடம் கற்பிக்க திமுகவை வெற்றி பெற செய்யுங்கள் என கூறினார்.  இந்த நியூட்ரினோ திட்டத்தின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று, அணு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகின் எந்த இடத்திலும் உள்ள அணுகுண்டுகளை செயல் இழக்கச் செய்வதாகும். ஆகவே, தமிழகம் நாகசாகி, ஹிரோஷிமா போல ஆபத்துக்கு உள்ளாகும் நிலை உள்ளது என பேசினார்.

 

இந்நிலையில், சென்னையில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், வைகோவின் எதிர்மறை பேச்சு கண்டனத்திற்குரியது, நாகசாகி, ஹிரோஷிமா தமிழகத்தை ஒப்பிடுவதை வைகோ நிறுத்தி கொள்ள வேண்டும். வைகோ நினைப்பது போல் தமிழகம் எந்த அழிவுப்பாதையிலும் செல்லவில்லை. பிரதமர் மோடியின் திட்டங்களை வைகோ படித்து பார்க்க வேண்டும் என்று தமிழிசை கூறினார். 

click me!