தமிழகத்துக்கு வேலைக்கு வந்த வடமாநிலத்தவர்களை திமுக இழிவுபடுத்தியது. வெறுப்பை விதைத்தது. ஆனால் பிரச்சினை வந்த பிறகு பாஜகவினரை கைது செய்கின்றனர் என்று கூறியுள்ளார் இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜூன் சம்பத்.
தூத்துக்குடியில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு நடந்தது. இதில் இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜூன் சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், “தமிழகத்துக்கு வேலைக்கு வந்த வடமாநிலத்தவர்களை திமுக இழிவுபடுத்தியது. வெறுப்பை விதைத்தது. ஆனால் பிரச்சினை வந்த பிறகு பாஜகவினரை கைது செய்கின்றனர். சாவர்கரை இழிவுபடுத்தி பேசிய ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி ஆட்சியில் லஞ்சம், ஊழலுக்கு இடமில்லை.
செங்கோட்டையில் நடைபெறும் இந்த நல்லாட்சியை சென்னை கோட்டைக்கு கொண்டு வருவதுதான் இந்து தர்ம மாநாட்டின் நோக்கம்'' என்று பேசினார். இந்த மாநாட்டில் தமிழகத்தில் தென்மாவட்டங்களின் நிர்வாக வளர்ச்சி, முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு தனி மாநிலமாக பிரித்து அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் கடலோர பகுதியில் வசிக்கும் பாரம்பரியமான இந்து தமிழ் மீனவ சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
இதையும் படிங்க..கோடு போட்ட ஸ்டாலின்.. ரோட்டை போட்ட எடப்பாடி பழனிசாமி.. ஏய் எப்புட்றா.! பாவம் கட்சிக்காரங்க !!
அவர்களுக்கு தென்மாவட்டங்களில் உரிய அரசியல் அங்கீகாரம் வழங்க வேண்டும். கள் இறக்க அனுமதி வழங்கி, அதனை பனை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து அரசு அதனை சந்தைப்படுத்துதல் வேண்டும். பனை மரங்களை பாதுகாக்க ஒரு மாவட்டத்துக்கு ஒரு கோடி பனைவிதைகளை விதைக்க வேண்டும். தமிழக கனிம வளங்கள் கொள்ளை போவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க..17 வயது சிறுமி.. ஒருதலைக்காதல்.. கடைசியில் காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி !!
இதையும் படிங்க..எடுத்தது எல்லாம் வேஸ்ட்.. புஷ்பா 2 படப்பிடிப்பில் கடுப்பான இயக்குனர் - ரசிகர்கள் அதிர்ச்சி!