பழைய வழக்கை தூசு தட்டும் தமிழக போலீஸ்.. அலறியடுத்து நீதி மன்றத்தின் கதவை தட்டிய எஸ்.வி சேகர்..

Published : Aug 21, 2021, 12:30 PM IST
பழைய வழக்கை தூசு தட்டும் தமிழக போலீஸ்.. அலறியடுத்து நீதி மன்றத்தின் கதவை தட்டிய எஸ்.வி சேகர்..

சுருக்கம்

களங்கமான தேசிய கொடியைதான் முதல்வர் ஏற்றப் போகிறாரா என்றுமட்டுமே தான் கேள்வி எழுப்பியதாகவும், தேசியக் கொடியை ஒருபோதும் அவமதிக்கவில்லை எனவும்  மனுவில் அவர் விளக்கம் அளித்துள்ளார். 

தேசிய கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். களங்கமான தேசிய கொடியை தான் முதல்வர் ஏற்றப் போகிறாரா என்றுதான் கேள்வி எழுப்பியதாகவும், தேசியக் கொடியை அவமதிக்கவில்லை எனவும் அவர் தன் மனுவில் விளக்கம் அளித்துள்ளார். 

அதாவது, சர்ச்சைகளுக்கு பெயர் போன காமடி நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ். வி சந்திரசேகர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். காவியை கலங்கம் என்று குறிப்பிடும் தமிழக முதல்வர் கலங்கமான தேசியக் கொடியைதான் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஏற்ற போகிறாரா அல்லது காவியை மட்டும் கட் செய்துவிட்டு வெள்ளையும் பச்சையும், அதாவது கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு மட்டும் இருந்தால் போதும் இந்துக்கள் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா? என்ன அந்த வீடியோவை கேள்வி எழுப்பினார்.

அதே நேரத்தில் அதிமுக உருப்பட வேண்டுமென்றால் அதிமுக கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், முதல்வர் குறித்து தவறான தகவலை தெரிவித்தும், தேசிய கொடியை அவமதிக்கும் வகையிலும் யூடியூபில் வீடியோ வெளியிட்ட எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர், சைபர் கிரைப் போலீசில் கொடுத்த புகாரில், எஸ்.வி. சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தேசிய கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்றும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் எஸ்.வி.சேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

களங்கமான தேசிய கொடியைதான் முதல்வர் ஏற்றப் போகிறாரா என்றுமட்டுமே தான் கேள்வி எழுப்பியதாகவும், தேசியக் கொடியை ஒருபோதும் அவமதிக்கவில்லை எனவும்  மனுவில் அவர் விளக்கம் அளித்துள்ளார். புகார் தாரரை எதிர்மனுதாரராக சேர்க்க எஸ்.வி.சேகர் தரப்புக்கு நீதிபதி நிர்மல் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது. பழைய வழக்குகளை திமுக தூசு தட்டி வரும் நிலையில், தேசிய கொடியை அவமதித்த வழக்கில் அதிமுக ஆட்சியில்  தப்பித்து வந்த எஸ்.வி சேகருக்கு எதிரான பிடி இறுகக்கூடிய சூழல் உருவாகி இருப்பதால். தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய கோரி அவர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

கணினி நிபுணர் பழனிசாமி.. நீங்க இல்ல; டெல்லி ஓனர் நினைத்தாலும் தடுக்க முடியாது.. உதயநிதி சவால்!
திமுகவும், ஃபெவிக்கால் ஃபிரண்ட்ஷிபும்..! கவர்ண்மென்ட் நடத்துறீங்களா? கண்காட்சி நடத்துறீங்களா..? பங்கம் செய்த விஜய்..!