கோழியை திருடிச் சென்ற போலீசார்... உரிமையாளரை நெஞ்சில் எட்டி மிதித்து அராஜாகம்..!

Published : Aug 21, 2021, 12:09 PM IST
கோழியை திருடிச் சென்ற போலீசார்... உரிமையாளரை நெஞ்சில் எட்டி மிதித்து அராஜாகம்..!

சுருக்கம்

கோழியை திருடி சென்றவர் காவலர் பால்கிருஷ்ணன் என்பது தெரிய வந்தது. அவர் மீது புகார் கொடுத்தோம். 

கோழி கடைக்குள் புகுந்து கோழியை திருடியது மட்டுமல்லாமல் கடை உரிமையாளரை தாக்கிய 3 காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் முத்து செல்வன். இவர் கடல் குடியில்கறிக்கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் , முத்துசெல்வனுக்கு தெரியாமல் நள்ளிரவில் கோழிக்கடைக்கு சென்று கோழிகளை பிடித்து சென்றுள்ளனர். இந்த தகவல் பரவிய நிலையில் காவலர் பாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் கோழிக்கடை உரிமியாளரான முத்துசெல்வனை தாக்கியுள்ளனர். இது தொடர்பாக பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையை சேர்ந்த மூன்றுபேரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து முத்து கிருஷ்ணன் மனைவி கூறுகையில், ‘’கோழியை திருடி சென்றவர் காவலர் பால்கிருஷ்ணன் என்பது தெரிய வந்தது. அவர் மீது புகார் கொடுத்தோம். இதனையடுத்து அவர் மூன்று காவலர்களுடன் வந்து எனது கணவரை நெஞ்சில் மிதித்து அடித்து உதைத்தனர். எங்களது கடையில் திருடி சென்ற காவலர் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னால் எங்களையே வந்து அடிக்கின்றனர். இது எந்த விதத்தில் நியாயம்.?  பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையினரே இப்படி நடந்து கொள்ளலாமா..? என வேதனை தெரிவிக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

கணினி நிபுணர் பழனிசாமி.. நீங்க இல்ல; டெல்லி ஓனர் நினைத்தாலும் தடுக்க முடியாது.. உதயநிதி சவால்!
திமுகவும், ஃபெவிக்கால் ஃபிரண்ட்ஷிபும்..! கவர்ண்மென்ட் நடத்துறீங்களா? கண்காட்சி நடத்துறீங்களா..? பங்கம் செய்த விஜய்..!