ஹரியான போலீசாருடன் சேர்ந்து பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தமிழக போலீஸ்.. கொள்ளை கும்பல் தலைவர் கைது.

By Ezhilarasan BabuFirst Published Jul 3, 2021, 9:08 AM IST
Highlights

இது பற்றி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை செய்ததில் வடமாநில கொள்ளையர்கள் என தெரியவந்தது. 

சென்னை ஏ.டி.எம்.மில் நூதன கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட 4வது  கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலி சென்னை அழைத்து வரப்பட்டான்.சென்னை தரமணி, வேளச்சேரி உள்பட பல பகுதிகளில் கடந்த மாதம் 15ந் தேதியில் இருந்து 18ந் தேதி வரை எஸ்பிஐ ஏ.டி.எம்.மில் அடுத்த அடுத்ததாக பணம் டெபாசிட் செய்வது போல் நடித்து நூதன முறையில் ரூ. 45 லட்சம் வரை கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தன. 

இது பற்றி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை செய்ததில் வடமாநில கொள்ளையர்கள் என தெரியவந்தது. இதையடுத்து தி.நகர் மற்றும் கீழ்பாக்கம் போலீஸ் துணை கமிஷனர்கள் தலைமையிலான தனிப் படை ஹரியானாவிற்கு சென்றது. அங்கு அரியானா போலீசாருடன் இணைந்து அமீர் அர்ஷ் வீரேந்தர் ராவத், நஜிம் உசேன் ஆகிய 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர்.  இந்த நிலையில் அரியானாவில் 4வது குற்றவாளியான கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலி என்பவனை  போலீசார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட சவுகத் அலியை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விமானம் மூலம் சென்னைக்கு  அழைத்து வரப்பட்டான். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலியை போலீசார் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு கீழ்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து கொள்ளைச் சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது.  அவரது கூட்டாளிகள் யார் என விரிவாக விசாரணை நடத்த உள்ளனர். அதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

click me!