#BREAKING காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்க்கு முக்கிய பதவி.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

Published : Jun 29, 2021, 12:47 PM IST
#BREAKING காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்க்கு முக்கிய பதவி.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

சுருக்கம்

தமிழக சிறுபான்மை ஆணைய தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழக சிறுபான்மை ஆணைய தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், கடந்த 1989ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 13ம் நாள் அன்று, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது. 

அதற்குப் பிறகு, கடந்த 2010ஆம் ஆண்டு, மீண்டும் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டம், 2010 (Act 21 of 2010)-இன்படி, சட்டபூர்வ அதிகாரம் பெற்ற ஆணையமாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. 

இந்த ஆணையத்தை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருத்தியமைத்து, அதன் தலைவராக எஸ். பீட்டர் அல்போன்ஸ் அவர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்கள். எஸ்.பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் கடந்த 1989 மற்றும் 1991ல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தென்காசி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி