இதற்குப் பெயர்தான் தமிழ்நாடு. நாட்டிலேயே தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 51.4% ஆக உயர்வு.

By Ezhilarasan BabuFirst Published Jun 11, 2021, 11:18 AM IST
Highlights

பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு,  சமூக நீதி என எல்லாத்துறைகளிலும் தமிழகம  தனித்துவத்துடன் விளங்குவதே தமிழகத்தில் தனிச்சிறப்பு ஆகும். 

தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 51.4% ஆக உயர்ந்துள்ளது எனவும், பிற மாநிலங்களைவிட 10 ஆண்டுகள் முன்னோக்கி வளர்ச்சி பெற்றிருப்பதாகவும் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட சர்வேயில் ( AISHE) தகவல் வெளியாகி உள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு,  சமூக நீதி என எல்லாத்துறைகளிலும் தமிழகம  தனித்துவத்துடன் விளங்குவதே தமிழகத்தில் தனிச்சிறப்பு ஆகும். 

உயர்கல்வியாக இருந்தாலும் சரி, மருத்துவ உட்கட்டமைப்பாக இருந்தாலும் சரி, பிற  மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழக முன்னோக்கிய பாதையில் வெற்றிநடை போடுவதை அனைவரும் அறிவர். அந்த வகையில் பல்வேறு மாநிலத்தவர்கள் கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும், ஏன் பல அயல்நாட்டினர்கள் கூட தமிழகத்திற்கு படையெடுப்பது கண்கூடு. இப்படி தமிழகத்தின் தனிச் சிறப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 51.4 சதவீதமாக உயர்ந்துள்ளது எனவும், பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பத்தாண்டுகள்  முன்னோக்கிய வளர்ச்சிப்பாதையில் தமிழகம் வெற்றி நடைபோடுகிறது எனவும் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட சர்வேயில் தகவல் வெளியாகியுள்ளது. 

அந்த வகையில், புதிய தேசிய கல்விக் கொள்கையில் 2030-ம் ஆண்டில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையை 50% ஆக உயர்த்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு 2019-2020-ம் கல்வியாண்டிலேயே 51.4%-ஐ எட்டியது. 2010-2011-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 32.9% ஆக இருந்த நிலையில் 10 ஆண்டுகளில் கணிசமான அளவில் உயர்வடைந்துள்ளது. நாட்டிலேயே உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும். 

75.8% உடன் சிக்கிம் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டுக்கு அடுத்த நிலையில் உத்தராகண்ட் மாநிலம் 41.5% உடன் 3-ம் இடத்தில் உள்ளது. 38.8% உடன் கேரளா 5-ம் இடத்தில் உள்ளது. அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதே உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை உயர காரணம் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 

click me!