தமிழகமே அதிர்ச்சி.. முதல்வர் ஸ்டாலின் வீட்டின் முன்பு தீக்குளித்து, சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழப்பு.

By Ezhilarasan BabuFirst Published Oct 5, 2021, 10:46 AM IST
Highlights

முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,

முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, நிறுத்திவைக்கப்பட்டிருந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் தீவிரமாக முன்னெடுத்துள்ளது. முன்னதாக தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு  தமிழ்நாடு பறையர் பேரவையின் தலைவர் வெற்றிமாறன் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் பல்வேறு காரணங்களை கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது, அவருக்கு எதிராக போட்டியிடும் சிலர் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து அந்த வேட்பு மனுவை நிராகரிக்க செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அவரது அடியாட்கள் தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாகவும், எனவே தனக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த மாதம் 27 ஆம் தேதி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீட்டின் முன்னர் வெற்றிமாறன் தீக்குளித்தார்.மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீக்குளித்த அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

இதையும் படியுங்க:வாகன ஓட்டிகளே தயாரா இருங்க.. இது அனைத்தும் மாறப்போகுதாம்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்.

சுமார் 45 சதவீத தீக்காயங்களுடன் வெற்றிமாறன் சிகிச்சை பெற்று வந்தார், இது தமிழகம் முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது, தீக்குளித்த அவரை உடனே தடுத்து, காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்த காவலர்களை தமிழக காவல்துறை டிஜிபி பாராட்டினார். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வெற்றிமாறன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது உயிரிழந்த வெற்றிமாறன் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதுகுறித்து போலீசார் மேல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
 

click me!