அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது..!! இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..!!

Published : Oct 29, 2020, 01:44 PM ISTUpdated : Oct 29, 2020, 01:45 PM IST
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது..!! இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..!!

சுருக்கம்

வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும்,  திருநெல்வேலி ,தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மிக கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  இது குறித்து தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன், 
வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது, இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழையும், சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்துள்ளது என கூறியுள்ளார்.

சென்னை மற்றும் திருவள்ளூரில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளது, அதிகபட்சமாக டிஜிபி அலுவலகத்தில் 18 சென்டி மீட்டரும், அண்ணா பல்கலைக்கழகத்தின் 14 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்த வரை
தென்தமிழகம் வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், கனமழை பொருத்தவரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மற்றும் தென் மாவட்டங்களில் நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அடுத்தவாரம் 24 மணி நேரத்திற்கு இடைவெளி விட்டு மழை தொடரும். வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம்,  ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், திருநெல்வேலி ,தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

3வது வரிசையில் தள்ளப்பட்ட ராகுல் காந்தி... கொதித்தெழுந்த காங்கிரஸ்.. இதுதான் ஜனநாயகமா?
திமுகவை சரமாரியாக விமர்சித்த ராமதாஸ்.. NDA பக்கம் வண்டியை திருப்பும் ஐயா? ட்விஸ்ட்!