தமிழகம் புண்ணிய பூமி.. விருதுநகரில் திமுக-காங்கிரசை அலறவிட்ட யோகி ஆதித்யாநாத்

By Ezhilarasan BabuFirst Published Apr 1, 2021, 11:03 AM IST
Highlights

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடந்தது, பெண்களை மானபங்கப்படுத்தி, பெண்களை இழிவுபடுத்துவது போன்ற செயல்களை செய்தனர். காங்கிரஸ் திமுக ஆட்சி தமிழகத்தில் வரக்கூடாது.  

விருதுநகரில் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜாக வேட்பாளர் பாண்டுரங்கனை ஆதரித்து உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, 

அனைவருக்கும் அன்பு வணக்கம் என்று தமிழில் உரையாற்ற தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் புன்னிய பூமி,  இராமேஸ்வரம் அமைந்துள்ள தமிழகம் என்ற புன்னிய பூமிக்கு வந்துள்ளது பெருமை அளிக்கிறது. தமிழ்நாடு சிறப்பான நாடு, தமிழகர்களின் நடனம் பரத நாட்டியம் மிக சிறப்பு மிக்க ஒரு கலாச்சார நடனம். தமிழகத்தினுடைய பாரதத்தின் மீதும், கலாச்சாரத்தின் மீதும் நமது பிரதமர் மிக பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளார். 

கடந்த 6 வருட ஆட்சியில் எங்கு சென்றாலும் தமிழர்களின் பெருமையும், கலாசரத்தையும் பேசி வருகிறார். தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜாக, பாமக, என நாம் அடங்கியுள்ளோம். கடந்த 60 ஆண்டு கால ஆட்சியில் காங்கிரஸ் ஆட்சி என்ன செய்தது. சாதாரன குடும்பத்தில் யாரேனும் நோய்வாய் பட்டால் 5 லட்சம் நிவாரணம் வழக்கும் ஆட்சி நமது ஜனநாயக கூட்டணி ஆட்சி.

அடிப்படை கட்டுப்பாடு வசதிகளுக்கு ரயில்வே துறை, விமானத்துறை, எய்ம்ஸ் மருத்துவமனை என நல்ல திட்டங்களை கொண்டு வந்தது பாஜக ஆட்சிதான். உலகத்தில் மிகப்பெரிய பொருளாதார பட்டியலில் நம் நாடு உயர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. நாட்டை மோடி வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறார். தமிழகத்தின் வளர்ச்சியை தலைசிறந்ததாக மாற்றிக் கொண்டு வருகிறார். காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடந்தது, பெண்களை மானபங்கப்படுத்தி, பெண்களை இழிவுபடுத்துவது போன்ற செயல்களை செய்தனர். காங்கிரஸ் திமுக ஆட்சி தமிழகத்தில் வரக்கூடாது. தேசிய ஜனநாயக கூட்டணி தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும். 

எந்த தேசத்தில் பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ  அங்குதான் செல்வம் அதிகம் இருக்கும். இந்த தேர்தலில் காங்கிரஸ் திமுக பெண்களை இழிவுபடுத்தி வருகிறது.விருது நகர் சட்டமன்றத் தேர்தலில் சர்வதேச அளவிலான பல்கலைக்கழகமும், சர்வதேச அளவுக்கு நிகரான விளையாட்டு மைதானமும், இளைஞர்களுக்கு பயிற்சி மையங்களும் இந்த மூன்று விஷயங்களும் விருதுநகரில் அமைக்க பாரதிய ஜனதா கட்சி முடிவெடுத்துள்ளது. தமிழ்மொழி பாரத நாட்டிலுள்ள அத்தனை இடங்களிலும் கலந்துள்ளது. தமிழ்மொழி இந்தியாவின் அனைத்து இடங்களிலும் இடம்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  

 

click me!