உள்ளூரில் சைக்கிளில் வலம் வரும் தமிழக அமைச்சர்..!! டீசர்ட், லுங்கியில் கலக்கல்...!!

Published : Dec 14, 2019, 03:02 PM IST
உள்ளூரில் சைக்கிளில் வலம் வரும் தமிழக அமைச்சர்..!!  டீசர்ட், லுங்கியில் கலக்கல்...!!

சுருக்கம்

அவருக்கு பாதுகாப்பிற்காக எந்த போலீசாரும் உடன் செல்வதில்லை,  இது என சொந்த ஊர் என்பதால் தனக்கு பாதுகாப்புக்கு போலீஸ் தேவையில்லையென அவர் மறுத்துவிடுகிறாராம்.

வார இறுதி நாட்களில் உள்ளூரில் சைக்கிளில் வலம் வந்து மக்களின் குறைகளை கேட்டு வருகிறார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது . அமைச்சர்கள் என்றால் வார விடுமுறை நாட்களில் உள்ளூரில்  பந்தாவாக டாடா சுமோவில் வலம்வந்து அதிரடி காட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது.  ஆனால் அதற்கு மாறாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சாதாரணமாக சைக்கிளில் வலம் வந்து மக்களோடு மக்களாக தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது . 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில்  தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் ,  வார இறுதி நாட்களில் தனது சொந்த ஊருக்கு சென்று தான் இளமை பருவத்தில்  இருந்ததைப்போல தற்போதும்  சகஜமாக பழகி வருகிறார்.  குறிப்பாக அதிகாலையில் எழுந்து கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் தொலைவுக்கு  சைக்கிளில்பயணம் செய்யும் அவர்  வயல்வெளிகள் அக்கம்பக்க கிராமத்தினர் என சைக்கிளில் சென்று சந்தித்து வருகிறார் .  இப்படி செய்வதை அவர் பல ஆண்டுகளாக வழக்கமாக வைத்துள்ளார் என கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.   இது குறித்து பலர் பல விமர்சனங்களை முன்வைத்தாலும் அவர் அதை பொருட்படுத்தவில்லை ,  சைக்கிளில் உல்லாசப் பயணம் மேற்கொள்ளும் அமைச்சர்,   எதிரில்  யாரைப் பார்த்தாலும் நின்று பேசுவது அவர்களின் குறைகளைக் கேட்பது என ஒரு கிராமத்துகாரதாகவே  இருந்து வருகிறார். 

இளைஞர்களை சந்தித்தாள்  தோள் மீது கை போட்டு பேசுவது , படிக்க உதவிகேட்டால் செய்வது என  சகஜமாக இருந்து வருகிறார் .  அவருக்கு பாதுகாப்பிற்காக எந்த போலீசாரும் உடன் செல்வதில்லை,  இது என சொந்த ஊர் என்பதால் தனக்கு பாதுகாப்புக்கு போலீஸ் தேவையில்லையென அவர் மறுத்துவிடுகிறாராம்.  அதேபோல இன்று  காலை அவர் டி-ஷர்ட் மற்றும் லுங்கி அணிந்து, சைக்கிளில்  சென்று கிராமத்தினரை சந்தித்து நலம் விசாரிப்பது போன்ற  புகைப்படங்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடதக்கது. 

PREV
click me!

Recommended Stories

ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!