'நாம் போட்டியிடாத இடங்களே இருக்க கூடாது'..! கட்சியினருக்கு அதிரடி கட்டளையிட்ட சீமான்..!

By Manikandan S R SFirst Published Dec 14, 2019, 11:07 AM IST
Highlights

கட்சி சார்பாக போட்டியிடக்கூடிய அனைத்து உள்ளாட்சி இடங்களுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வது மட்டுமின்றி தாங்களும் வாய்ப்புள்ள இடங்களில் தவறாமல் போட்டியிட்டு, நாம் தமிழர் கட்சி போட்டியிடாத உள்ளாட்சி இடங்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

வர இருக்கின்ற 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஊரக அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றது. அக்கட்சிக்கு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில், கட்சி சார்பாக போட்டியிடக்கூடிய அனைத்து உள்ளாட்சி இடங்களுக்கும் வேட்பாளர்களை நிறுத்தவேண்டியது கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களின் முழுமுதற் கடமையாகும்.  அதனடிப்படையில் மாநில, மாவட்ட, தொகுதி, நகரம், பகுதி, ஒன்றியம், கிளை உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் மாவட்டவாரியாக அமைக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தேர்தல் பணிக்குழுவினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

கட்சி சார்பாக போட்டியிடக்கூடிய அனைத்து உள்ளாட்சி இடங்களுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வது மட்டுமின்றி தாங்களும் வாய்ப்புள்ள இடங்களில் தவறாமல் போட்டியிட்டு, நாம் தமிழர் கட்சி போட்டியிடாத உள்ளாட்சி இடங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் களம் காண வேண்டும் எனவும், வேட்புமனு பதிவு செய்வதற்கு இன்னும் ஓரிரு நாட்களே மிஞ்சியுள்ள நிலையில் விரைந்து களப்பணியாற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

click me!