தமிழகத்தில் சொக்கத்தங்கம் ஆட்சி...!! திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்...!!

By Ezhilarasan BabuFirst Published Sep 27, 2019, 5:33 PM IST
Highlights

எப்படியாவது அதிமுக ஆட்சி மீது சாயம் பூச வேண்டும் என்கிற நடவடிக்கையில் திருமாவளவன் ஈடுபட்டுள்ளார் என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர், வேண்டும் என்று திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்று எதிர்க்கட்சிகள் செய்யும் பிரச்சாரம் என்றைக்கும் உண்மையாகாது எனக் கூறினார்.

தினத்தந்தி நிறுவனர் சீபா ஆதித்தனாரின் பிறந்தநாளையொட்டி இன்று தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் பெஞ்சமின் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை எழும்பூரில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார், அதில் தமிழகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறதா அல்லது அதிமுக ஆட்சி நடக்கிறதா என்று திருமாவளவன் கேள்விக்கு, திருமாவளவனுக்கு ஏன் இந்த மாதிரி சந்தேகம் எழுந்துள்ளது என்பது எனக்கு தெரியவில்லை எனவும் ஆனால் தமிழகத்தில் முழுக்க சொக்கத்தங்கம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சிதான் நடைபெறுகிறது என்று கூறினார்.

 

மேலும் அதிமுக ஆட்சியை பற்றி யாரும் குறைகூறா அளவிற்கு தான் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார். ஆனால் எப்படியாவது அதிமுக ஆட்சி மீது சாயம் பூச வேண்டும் என்கிற நடவடிக்கையில் திருமாவளவன் ஈடுபட்டுள்ளார் என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர், வேண்டும் என்று திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்று எதிர்க்கட்சிகள் செய்யும் பிரச்சாரம் என்றைக்கும் உண்மையாகாது எனக் கூறினார். திமுக ஆட்சியில் தான் நதிநீர் விவகாரத்தில் தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கப்பட்ட்டுள்ளது என்று குற்றம்சாட்டிய அமைச்சர் ஜெயக்குமார், நடுவர் மன்றம் வேண்டும் என்று எம்ஜிஆர் காலத்தில் எழுதிய கடிதத்தால் தான் இன்று நடுவர் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது என்றார். அதுமட்டுமின்றி காலத்தால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் எல்லாம் தற்போது அதிமுக அரசு தீர்த்து வருகிறது என்று குறிப்பிட்ட அமைச்சர், முதலமைச்சர் கேரள அரசுடன் பேசி நதிநீர் பிரச்சினைக்கு குழு அமைத்துள்ளார். ஆனால் இதை எதிர்க்கட்சிகள் வேண்டும் என்று குறைகூறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நீட் தேர்வு பொருத்தவரை தமிழகம் அரசு அதை நடத்தவில்லை என்றும், மத்திய அரசு தான் நடத்தியது என்றார். மேலும் இதுபோன்ற ஆள்மாறாட்டம் இருக்கும் பட்சத்தில் பாரபட்சமில்லாமல் யார் தவறு செய்தாலும் அவர்களை கடுமையாக சட்டத்தின் மூலம் தண்டிக்க வேண்டும் என்று கூறினார். இவ்விவகாரம் முழுமையாக சிபிசிஐடி விசாரணையில் உள்ளதால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது உள்ளாட்சி தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் நல்ல முடிவு எடுக்கும் 

ரயில்வே துறை தேர்வு பொருத்தவரை தமிழில் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில்வே  பணியில் சேர்பவர்கள் எந்த மொழியில் வேண்டும் என்றாலும் அவர்கள் அதனை தேர்வு செய்யும் வகையில் தான் நடைமுறை இருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், ரயில்வே துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக நடைமுறைக்கு வராத நிலையில் ஆலோசனை மட்டும்தான் நடைபெற்று வருகிறது. எனவே அதுக்குறித்து தற்போது கருத்து கூற முடியாது என அமைச்சர் தெரிவித்தார்.
 

click me!