சென்னை பாதுகாப்பா இருக்குதுன்னா அதுக்கு இது தான் காரணம்...!! இது மட்டும் அழிஞ்சா சென்னையே இல்லை...!!

By Ezhilarasan BabuFirst Published Sep 27, 2019, 4:50 PM IST
Highlights

எனவே மீன்வளத்துறை அமைச்சகம் ஏற்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றாது என்றும் தெரிவித்தார். எண்ணூர், பழவேற்காடு சதுப்பு நிலம் சென்னைக்கு பெருவெள்ளம் ஏற்படும் காலங்களில் அரணாகவும், சென்னை மக்களுக்கு குடிநீரும் வழங்கி வந்த நிலையில் அதானி துறைமுக விரிவாக்கத்தால் எண்ணூர், பழவேற்காடு கடல் பகுதிகள் முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மீனவர்களை அழிக்கவே சாகர் மாலா போன்ற திட்டங்களை கொண்டு வந்து கடல் கரையில் உள்ள  மீனவர்களை அப்புறப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதுடன்,   மீன்வளத்துறை அமைச்சகம் ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை மத்திய அரசு ஒருபோதும் நிறைவேற்றாது எனவும் மனிதநேய  மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் அதானி துறைமுக விரிவாக்க பணிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆய்வு மேற்கொண்டு மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மீனவர்களை அழிக்கவே சாகர் மாலா போன்ற திட்டங்களை கொண்டு வந்து கடல் எல்லையில் இருந்து மீனவர்களை அப்புறப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது என கூறினார். எனவே மீன்வளத்துறை அமைச்சகம் ஏற்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றாது என்றும் தெரிவித்தார்.

எண்ணூர், பழவேற்காடு சதுப்பு நிலம் சென்னைக்கு பெருவெள்ளம் ஏற்படும் காலங்களில் அரணாகவும், சென்னை மக்களுக்கு குடிநீரும் வழங்கி வந்த நிலையில் அதானி துறைமுக விரிவாக்கத்தால் எண்ணூர், பழவேற்காடு கடல் பகுதிகள் முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.அண்மையில் பில்கேட்ஸ் நிறுவனம் பிரதமர் மோடிக்கு குளோபல்  கோல் கீப்பர் விருதை கொடுத்தது, ஆனால் அசுத்தமான கடற்பகுதியாக பழவேற்காட்டை மத்திய அரசு மாற்றி வருகிறது என குற்றம் சாட்டினார். துறைமுக விரிவாக்கத்திற்கு எதிராக போராடி வரும் மக்களின் கோரிக்கையாக இந்த கடல் பகுதிகளை நீர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியும் வலியுறுத்துவதாக கூறினார்.

மீனவ மக்களோடு இணைந்து மனிதநேய மக்கள் கட்சி போராட்ட களத்தில் துணை நிற்கும் என்றும் கூறினார். மக்கள் போராட்டம் ஆங்கிலேயர்கள் ஆட்சியிலேயே வெற்றி பெற்றுள்ளது என்றும் மற்றொரு விடுதலை போராட்டம் இப்போது தேவைப்படுகிறது என்றும் ஜவாஹிருல்லா கூறினார். காட்டுப்பள்ளியில் அதானி துறைமுக விரிவாக்க பணிகளை மக்களின் போராட்டம் நிச்சயமாக தடுத்து நிறுத்தும் எனவும் ஜவாஹிருல்லா நம்பிக்கை தெரிவித்தார்.
 

click me!