கொரோனா தடுப்பில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது... வரதராஜன் திடீர் பல்டி..!

By Thiraviaraj RMFirst Published Jun 8, 2020, 6:08 PM IST
Highlights


கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு முழு வீச்சில் சிறப்பாக செயல்படுகிறது என நடிகர் மற்றும் பத்திரிக்கையாளர் வரதராஜன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு முழு வீச்சில் சிறப்பாக செயல்படுகிறது என நடிகர் மற்றும் பத்திரிக்கையாளர் வரதராஜன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

டிவி நடிகரும், செய்தி வாசிப்பாளருமான வரதராஜன் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கபட்ட தனது நண்பருக்கு எந்த மருத்துவமனையிலும் அனுமதி கிடைக்காததால் மிகவும் சிரமப்பட்டோம். சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லை என்கிறார்கள். அரசு, தனியார் மருத்துவமனைகளின் உயர் பொறுப்புகளில் உள்ளவர்களிடம் பேசினோம். ஆனால் உதவி கிடைக்கவில்லை. அதனால் யாரும் வெளியில் அவசியமின்றி செல்லாதீர்கள். அப்படிச் சென்றால் முக்கவசம் அணிந்து சரியான நடைமுறகளைக் கடைபிடியுங்கள்”என்று கூறியிருந்தார்.

வரதராஜன் வெளியிட்ட காணொலி வைரலானது. வரதராஜன் வெளியிட்ட வீடியோ குறித்து கடுமையாக விமர்சித்தார். அமைச்சர் விஜயபாஸ்கர். “வரதராஜன் குற்றச்சாட்டில் துளி கூட உண்மையில்லை. தமிழக சுகாதாரத்துறையின் செயல்பாட்டைக் குற்றம் சொல்வதில் வரதராஜனுக்கு என்ன சந்தோஷம். எந்த மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பிவிட்டன என்று அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை என்றால் அதை நிரூபிக்க வரதராஜனை என்னுடன் நேரடியாக மருத்துவமனைக்கு வரச் சொல்லுங்கள். நான் அழைத்துச் செல்கிறேன். பாராட்டவில்லை என்றாலும் செய்தியாளர் வரதராஜன் தவறான தகவலை பரப்பக் கூடாது.தவறான தகவல் பரப்பியதாக அவர் மீது பெருந்தொற்று நோய் தொற்று சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இன்று சாதாரண மக்களைக் காக்க அரசு போராடிக் கொண்டிருக்கிறது. வரதராஜன் அவசர கால நிலையில் பொதுதளத்தில் வதந்தி பரப்பினால் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு முழு வீச்சில் சிறப்பாக செயல்படுகிறது என நடிகர் மற்றும் பத்திரிக்கையாளர் வரதராஜன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

click me!