ஆதங்கத்தையும், ஆற்றாமையையும் சொன்னால் அரெஸ்ட் செய்வீர்களா..? சீறும் சீமான்..!

By Thiraviaraj RMFirst Published Jun 8, 2020, 5:47 PM IST
Highlights

ஊடகவியலாளர் வரதராஜன் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாதென வலியுறுத்துகிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊடகவியலாளர் வரதராஜன் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாதென வலியுறுத்துகிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’சென்னை மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்குப் படுக்கை வசதிகளில்லை என ஊடகவியலாளர் வரதராஜன் கூறியிருப்பதற்கு அவர் மீது  வழக்குத்தொடுக்கப் போவதாக சுகாதாரத்துறை அமைச்சர்  பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.

ஆதங்கத்தையும், ஆற்றாமையையும் வெளிப்படுத்தும் அவரது கருத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து குறைநீக்கவோ, தகுந்த விளக்கம் கொடுக்கவோ முன்வராத தமிழக அரசு வழக்குத் தொடுத்து வாயடைக்க முனைவது பெரும் தவறாகும். 

தன் அனுபவத்தில் நேர்ந்த துயரத்தை கூறி மக்களை விழிப்படைய செய்ய முயன்றதற்கு சட்டத்தின்மூலம் சாமானியர் மீது அடக்குமுறையை ஏவுவது கருத்துச்சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் அரசப்பயங்கரவாதமாகும். ஊடகவியலாளர் வரதராஜன் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாதென வலியுறுத்துகிறேன்’’என அவர் தெரிவித்துள்ளார்.

click me!