இஸ்லாமிய பயங்கரவாதத்தை கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு.. சி.பி.ராதாகிருஷ்ணன் ஆவேசம்..!

Published : Oct 27, 2022, 09:14 AM ISTUpdated : Oct 27, 2022, 09:17 AM IST
இஸ்லாமிய பயங்கரவாதத்தை கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு.. சி.பி.ராதாகிருஷ்ணன் ஆவேசம்..!

சுருக்கம்

இஸ்லாமிய பயங்கரவாதம் மீண்டும் கோவையில் தலைதூக்கியுள்ளது என்பதை இந்த கார் குண்டு வெடிப்பு உணர்த்துகிறது. திமுக ஆளும் போது தான் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. மீண்டும் அது போன்ற சதி கோவையில் நடைபெற இருந்தது அதிஷ்டவசமாக அதன் மூளையாக இருந்தவர் பலியானார். கோட்டை ஈஸ்வரனால் கோவை காக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பயங்கரவாதிகள் கோவையை குறி வைக்கும் நொக்கம் பொருளாதாரத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை இருப்பது தான் என காரணம் என சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், இந்து முன்னனி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன்;- இஸ்லாமிய பயங்கரவாதம் மீண்டும் கோவையில் தலைதூக்கியுள்ளது என்பதை இந்த கார் குண்டு வெடிப்பு உணர்த்துகிறது. திமுக ஆளும் போது தான் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. மீண்டும் அது போன்ற சதி கோவையில் நடைபெற இருந்தது அதிஷ்டவசமாக அதன் மூளையாக இருந்தவர் பலியானார். கோட்டை ஈஸ்வரனால் கோவை காக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- கோவை கார் வெடிப்பு விபத்து..! தேசிய புலனாய்வுக்கு மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை

உடனடியாக டிஜிபி வந்தது வரவேற்கிறோம். ஆனால், முறையான ஆய்வு செய்யாமல் அவசர கதியில் சிலிண்டர் வெடித்ததால் விபத்து என அறிக்கை விடுத்தது அவரது பொறுப்புக்கு உகந்தது  இல்லை. ஏன் வெடித்தது என காவல்துறை உற்று நோக்கி இருக்க வேண்டும். சிறையில் இருக்கும் பயங்கரவாதிகளுடன் உயிரிழந்த நபர் தொடர்பில் இருந்ததை மறுக்க முடியாது. ஏற்கனவே அவரை என்.ஐ ஏ விசாரித்துள்ளது.

அதனடிப்படையில் காவல்துறை  கண்காணித்திருக்க வேண்டும். இதில் தோல்வியடைந்தது ஏன் என காவல்துறை சிந்திக்க வேண்டும். முதல்வர் மூன்று நாள் அமைதியாக இருந்துவிட்டு இன்றுதான் தூக்கத்தில் இருந்து எழுந்ததை போல் அறிக்கை விட்டுள்ளார். கேரளத்தில் பலமாக இருக்கும் பிஎப்ஐ அங்கு அமைதியாக இருந்துவிட்டு தமிழகத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசு இஸ்லாமிய பயங்கரவாதத்தை கண்டும் காணாமல் இருக்கிறது. கடந்த கால வரலாற்றில் ஒரு பாடத்தை கண்டு கொள்ளாமல் இருக்கும் இயக்கம் திமுக மட்டுமே ஓட்டை குறிவைத்து சமூகத்தின் மீது அக்கறையில்லாமல் இருக்கிறது திமுக. 

இஸ்லாமிய பயங்கரவாதிகள் கோவையை குறி வைக்கும் நொக்கம் பொருளாதாரத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை இருப்பது தான். கோவைக்கு அடுத்தது சென்னையாக தான் இருக்கும் இதனை மனதில் வைத்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை அதிகாரிகள் கையை கட்டி போட்டு செயல்பட சொன்னால் எப்படி? டிஜிபி ஒரு சிறப்பான அதிகாரி. ஆனால் அவசர கோலத்தில் செயல்பட்டுள்ளார். தற்போது 75 கிலோ வெடிபொருள் மட்டும் இருந்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால் ஒன்னரை டன் வெடி பொருள் இருந்ததாக தகவல் வந்துள்ளது. 

காவல்துறை மூடி மறைக்காமல் முழு விபரத்தை வெளியிட வேண்டும். முழுமையான பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
காவல்துறையால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களின் தொடர்பு தமிழக எல்லையை தாண்டி உள்ளதால் காவல்துறை என்ஐஏ உடன் ஒத்துழைக்க வேண்டும் தமிழக அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும் கோவையை காக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி அக்டோபர் 31 ம் தேதி முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுக்கிறது. அதற்கு கோவை வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

உளவு துறையை சுதந்திரமாக செயல்பட விட்டாலே இத்தனை போலீசார் இங்கு குவிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. நல்ல அதிகாரிகளை  நியமித்தால் மட்டும் போதாது அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். தமிழக டிஜிபி யின் திறமையை முழுமையாக வெளிப்படுத்த தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். பந்திற்கு ஆதரவளிக்க திமுக உள்ளிட்ட அனைத்து எதிர் கட்சிகளிடமும் ஆதரவு  கேட்கிறோம். காவல்துறை கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான நபரின் வீட்டிலிருந்து எவ்வளவு வெடி பொருட்கள் கைப்பற்றினார்கள் என்பதை பொது வெளியில் வெளியிடா விட்டாலும் என்ஐஏ விடமாவது பகிர  வேண்டும் என சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிங்க;-  கோவை கார் வெடி விபத்து..! உயிரிழந்த முபினின் உறவினரிடம் போலீஸ் விசாரணை..! லேப்டாப் பறிமுதல்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!
மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!