அந்த புகைப்படங்களில் கோவை அரசு போக்குவரத்து கழகம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதைப் பார்ப்பவர்கள் இது உண்மையிலேயே அரசுப்பேருந்துகள்தானா என வியக்கும் வகையில் அழகிய தோற்றத்துடன் அது காணப்படுகிறது. பல ஆயிரங்களை கட்டணமாக வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு நிகராக , இல்லை இல்லை அந்த பேருந்துகளையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு இப்பேருந்துகள் அழகாகவும் ஹைடெக் ஆகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தனியார் பேருந்துகளை விஞ்சும் அளவிற்கு தமிழ்நாடு அரசு பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன, பயணிகளை கவரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்பேருந்துகள் அரசுப்பேருந்துகளா இல்லை ஹைடெக் பேருந்துகளா என்று வியக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளன. போக்குவரத்தை துறை அமைச்சர் எம் ஆர் விஜய பாஸ்கர் அவர்கள் தலைமையில் அரசு போக்குவரத்து துறையை நவீன மையமாகும் முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளது.
undefined
அரசு பேருந்துகள் என்றாலே நம்மில் பலருக்கு சலிப்பு ஏற்படுவதுண்டு, காரணம் ஓட்டை உடைச்சலான படிக்கட்டுகள், தடதடவென ஆடும் இருக்கைகள், மழை வந்தால் உள்ளே குடைபிடித்து செல்ல வேண்டும் என்பது போன்ற கூரைகள் இதுதான் அரசு பேருந்துகளின் நிலையாக இருந்தது. ஆனால் அந்நிலைமை இப்போது தலைகீழாக மாறியுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையை நவீனப்படுத்தும் நோக்கில், இரண்டு கட்டங்களாக சுமார் 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டு காலகட்டத்தில் சுமார் ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் 1880 ஒரு புதிய பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் மாதமாதம் 500 பேருந்துகள் 600 பேருந்துகள் என பொதுமக்களின் பயண்பாட்டிற்காக அற்பணித்து வருகிறார். இந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுலாத்துறை சார்பில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 33 அதிநவீன வசதிகளுடன் கூடிய வால்வோ பேருந்துகளை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.
அதேநேரத்தில் மேலும் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்துகள் தயாரிக்கப்பட்டுவருகின்றன. அந்த பேருந்துக்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன. அந்த புகைப்படங்களில் கோவை அரசு போக்குவரத்து கழகம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதைப் பார்ப்பவர்கள் இது உண்மையிலேயே அரசுப்பேருந்துகள்தானா என வியக்கும் வகையில் அழகிய தோற்றத்துடன் அது காணப்படுகிறது. பல ஆயிரங்களை கட்டணமாக வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு நிகராக ,இல்லை இல்லை அந்த பேருந்துகளையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு இப்பேருந்துகள் அழகாகவும் ஹைடெக் ஆகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கோவை அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள இக்குளிர்சாதன வசதி கொண்ட இப்பேருந்துகளில், கழிவறை வசதி, படுக்கை வசதிகள், ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பேருந்துகள் பின்னோக்கி வருவதை அறியும் வகையில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகள் இறங்கும் இடத்தில் அறிவிக்கும் வகையில் ஒலி எச்சரிக்கை கருவி வசதி செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் கொண்டு வரும் ஸ்டிக்கை பாதுகாப்பாக வைக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன, அத்துடன் மின்னணு வழித்தட பலகைகள், மற்றும் தீயணைப்பு கருவிகள் இப்பேருந்துகளில் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்துறைக்கு அமைச்சர் எம் ஆர் விஜயாபஸ்கர் தலைமை ஏற்றது முதல், அவரின் முயற்சியில் போக்குவரத்து துறை பல்வேறு மாற்றங்களை பெற்று வருகிறது.இந்த நிலையில் தனியார் பேருந்துகளை விஞ்சும் அளவிற்கு தமிழ்நாடு அரசு பேருந்துகள் உருவாகி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.