திமுக போட்ட திடீர் குண்டு... பற்றியெரியும் தமிழக காங்கிரஸ்..!

By Thiraviaraj RMFirst Published Jun 22, 2019, 4:04 PM IST
Highlights

என்னுடைய செல்வாக்கால்தான் வெற்றி பெற்றேன் என்று நான் எங்கேயும் தெரிவிக்கவில்லை திருச்சி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கர்சர் மறுத்துள்ளார். 

என்னுடைய செல்வாக்கால்தான் வெற்றி பெற்றேன் என்று நான் எங்கேயும் தெரிவிக்கவில்லை திருச்சி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கர்சர் மறுத்துள்ளார்.

 

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கே.எஸ்.அழகிரி, ’’மாவட்ட தலைவர்கள் பதவியில் நீடிக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு மூன்று தேர்வுகள் வைக்கப்படும். அதில் வெற்றி பெற்றால் மட்டுமே பதவியில் நீடிக்க முடியும். உள்ளாட்சி தேர்தலில் நாம் அதிக இடங்களில் போட்டியிட்ட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இது திமுகவினரை ஆத்திரப்பட வைத்துள்ளது. இதனால், அதிருப்தியான திமுக எம்.எல்.ஏ கே,என்.நேரு, ‘உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும். காங்கிரஸுக்கு எவ்வளவு நாளுக்கு திமுக பல்லாக்கு தூக்குவது.? காங்கிரஸ் கட்சியினர் ஆளாளுக்கு பேசுவார்கள் அதையெல்லாம் கேட்டுக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? என ஒரு விழாவில் பொங்கி எழுந்து விட்டார். 

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகி கராத்தே தியாகராஜன் கருத்து கூறுகையில், ‘’ திருச்சியில் எனக்கு 4.5 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. இதில் 2 லட்சம் வாக்குகள் கூட்டணி கட்சிகள் மூலம் கிடைத்தவை. மீதமுள்ள 2.5 லட்சம் வாக்குகள் எனது தனிப்பட்ட செல்வாக்குக்கு கிடைத்த வாக்குகள் என திருநாவுக்கரசர் கூறினார். உடனே காங்கிரஸ் கட்சி தலைவர்களை அழைத்த மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர் இப்படி பேசலாமா? எங்கள் கட்சியுனர் பிரச்சாரம் செய்து உழைத்து வெற்றி பெற வைத்தால் அவர், தனக்காக விழுந்த ஓட்டுகள் என பெருமை பேசித் திரிகிறார்’ என கொந்தளித்து விட்டார். அதனைத் தொடர்ந்தே கே.என்.நேரு காங்கிரஸுடன் கூட்டணி வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்’’ என கராத்தே தியாகராஜன் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் இதுகுறித்து, ‘ என்னுடைய செல்வாக்கால்தான் வெற்றி பெற்றேன் என்று நான் எங்கேயும் தெரிவிக்கவில்லை. அப்படி நான் சொன்னதாக கராத்தே தியாகராஜன் சொல்லி இருப்பது கண்டனத்துக்கு உரியது. உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும். மக்கள் விரும்பும் கூட்டணியுடன் மு.க.ஸ்டாலின் அடுத்த முதல்வராக வேண்டும்’’ எனக் கூறி இருக்கிறார் திருநாவுக்கரசர். ஆக மொத்தத்தில் இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சிக்குள் மோதலை ஆரம்பித்து இருக்கிறது. 

click me!