மு.க.ஸ்டாலினிடம் அட்வான்ஸ் வாங்கிய டி.டி.வி... அதிர்ந்து ஒப்பாரி வைத்த சசிகலா... ’அம்மா’ கூறும் அதிரடி சாட்சி..!

Published : Jun 22, 2019, 03:24 PM ISTUpdated : Jun 22, 2019, 03:48 PM IST
மு.க.ஸ்டாலினிடம் அட்வான்ஸ் வாங்கிய டி.டி.வி... அதிர்ந்து ஒப்பாரி வைத்த சசிகலா... ’அம்மா’ கூறும் அதிரடி சாட்சி..!

சுருக்கம்

டி.டி.விதினகரன் மு.க.ஸ்டாலினிடம் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு அட்வான்ஸ் வாங்கியதாகவும், அதனை அறிந்த சசிகலா சிறையில் ஒப்பாரி வைத்து அழுததாகவும் நமது அம்மா நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. 

டி.டி.விதினகரன் மு.க.ஸ்டாலினிடம் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு அட்வான்ஸ் வாங்கியதாகவும், அதனை அறிந்த சசிகலா சிறையில் ஒப்பாரி வைத்து அழுததாகவும் நமது அம்மா நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. 

‘தங்கத்தை பழிக்கும் யோக்கியதை துருப்பிடித்த தகரத்துக்கு உண்டோ...’ என்ற அந்தக் கட்டிரையில், ’’டோக்கன் பார்ட்டியோ 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் வரை ஆமமூக்கன் கட்சியை நடத்தியே தீர்வேன் என்று அடம்பிடித்தாராம். 

மேலும் அதற்கு அறிவாலய தரப்பிடம் இருந்து அட்வான்ஸ் வாங்கிய விபரங்களையும், உள்ளாட்சி மற்றும் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஆமமூக்கன் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான மொத்த செலவையும் திருவாளர் துண்டுச்சீட்டு செட்டில் செய்வதாக உறுதி தந்திருக்கும் விபரத்தையும் எடுத்து சொல்ல ஒரு கணம் அதிர்ந்து போன ஸ்மால் மதர் அடப்பாவி உன்னை தமிழ் நாட்டு பக்கமே தல காட்டக் கூடாதுன்னு பத்து வருஷன் பாண்டிச்சேரி பக்கமா பத்தி விட்டது எவ்வளவு சரியான நடவடிக்கை என்று இப்பத்தான் புரியுது.

இன்னும் ஆயிரம் தலைமுறைக்கும் நம்ம மாஃபியா குடும்பத்துல ஏழைகளே இருக்க மாட்டார்கள் என்கிற அளவுக்கு ‘எந்தக் கட்சியின் பெயரை சொல்லி ஆஸ்திகளை அள்ளிக் குவித்தோமோ’’ அந்தக் கட்சிக்கு எதிராக எதிராளிகளிடமே டீல் போடுறீயே இந்த பாவம் நம்மள சும்மா விடுமா என்றெல்லாம் ஒப்பாரி விட்டு அழுதபோதும் சிரிச்ச வாயரோ அதெல்லாம் முடியாதுன்னு முறச்சிக்கிட்டு நின்னாராம். 

சொந்தக் குடும்பத்தையே ஏமாற்றி, தனக்கு வாழ்வு கொடுத்த கட்சிக்கும் திரோகம் செய்து தன்னையும் ஒரு தலைவன் என்று நம்புகிற அப்பாவி தொண்டனையும் ஏமாற்றி, வயிறு வளர்க்கும் மனிதப்பிழைகளுக்கு இத்தகைய மகோன்னத விபரங்கள் ஒரு நாளும் புரியாது.  அதனால் ஒட்டு மொத்த தமிழகத்தாலும் காறித் துப்பப்பட்டு ஒடு தொகுதியில் குட்ட கட்டுத் தொகை தக்க வைப்பதற்கு வக்கற்ற நிலையில் அதிமுக உண்மை ரத்தம் ஓடுகிற ஒவ்வொரு தொண்டனும் கழகத்தை நோக்கி அணிவகுக்க தொடங்கி விட்ட நிலையில்  எதிராளிகளிடம் பேரம் பேசிக் கொண்டு துரோகத்தையே வாழ்வாக தொடர்கிற திகார்காரனுக்கு தூய தொண்டால் மக்களின் உயரிய அபிமானத்தை பெற்ற கழகத்தின் அமைச்சர்கள் குறித்து குறைகூறுகிற யோக்கிதை கடுகளவும் கிடையாது’’ எனத் தெரிவித்துள்ளது நமது அம்மா நாளிதழ். 

இதையும் படிங்க...தினகரா... கட்சியை கலைச்சிப்புட்டு ஒழுங்கா ஊர்போய்ச் சேரு... சின்னம்மா எச்சரித்ததாக நமது அம்மா..!

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!