தமிழக காங்கிரஸ் எம்.பி நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி... ஐசியூ வார்டில் சிகிச்சை..!

Published : Jul 26, 2021, 04:56 PM IST
தமிழக காங்கிரஸ் எம்.பி நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி... ஐசியூ வார்டில் சிகிச்சை..!

சுருக்கம்

கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐசியூவில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவர் காங்கிரஸ் கட்சியின் ஒடிசா மாநில பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். சென்னை, அண்ணாநகரில் இவரது வீடு உள்ளது. மருத்துவம் படித்த இவர் டாக்டராகவும், பிற மருத்துவமனைகளில் ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.  கோவா மாநில காங்கிரஸ் பொறுப்பாளராகவும் ஏற்கெனவே இருந்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!