கிறிஸ்தவ திருச்சபைகளில் தலைவிரித்தாடும் சாதிய தீண்டாமை.. அரசு, நீதிமன்றம் தலையிட கோரிக்கை.

Published : Jul 26, 2021, 04:55 PM IST
கிறிஸ்தவ திருச்சபைகளில் தலைவிரித்தாடும் சாதிய தீண்டாமை.. அரசு, நீதிமன்றம் தலையிட கோரிக்கை.

சுருக்கம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. மேத்யூ, கிறிஸ்தவ திருச்சபைகளில் சாதிய தீண்டாமைக் பாகுபாடுகள் இருப்பதாக குற்றம்சாட்டினார், 

கிறிஸ்தவ திருச்சபைகளில் தொடரும் சாதிய தீண்டாமைகள் குறித்து தமிழக அரசும் உயர்நீதிமன்றமும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக தலித் கிறிஸ்தவர் இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்த்திட வேண்டும்,  தனி நல வாரியம் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக தலித் கிறிஸ்தவர்கள் இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. மேத்யூ, 

கிறிஸ்தவ திருச்சபைகளில் சாதிய தீண்டாமைக் பாகுபாடுகள் இருப்பதாக குற்றம்சாட்டினார், அதனை களைய தமிழக அரசு மற்றும் உயர் நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர் விகிதாசார அடிப்படையில் தலித் ஆயர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும், தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!