
முதல்வர் ஸ்டாலினுக்கு உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் உண்டு. தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றைச் செய்வதை வாடிக்கையாகக் கொண்டவர். சித்தரஞ்சன் சாலைகளில் அதிகாலை நேரங்களில் நடைப்பயிற்சி செய்யும் முதல்வரைப் பார்க்கலாம்.
சமீபத்தில் தேர்தல் பிரசார சமயத்தில்கூட சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிளிங் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். கண்ணாடி, ஹெல்மெட் என கலக்கலாக படுவேகமாக ஸ்டாலின் சைக்கிளிங் சென்ற அந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டது.
முதல்வர் ஆன பிறகு பணிச்சுமை அதிகரித்த போதிலும், தொடர்ந்து உடற்பயிற்சி மற்றும் சைக்கிளிங் செய்வதை முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பின்பற்றி வருகிறார். காலை மற்றும் மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்வதை முதலமைச்சர் வழக்கமாக கொண்டிருக்கிறார். அவ்வப்போது, முதல்வரின் ஜிம் ஓர்க் அவுட் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம்.
முதல்வர் ஸ்டாலின், தனது வீட்டிலேயே உடற்பயிற்சி கூடம் ஒன்றை அமைத்துள்ளார். நவீன உபகரணங்களுடன் அமைந்துள்ள அந்த உடற்பயிற்சி கூடத்தில் டிவியில் செய்திகளை பார்த்தவாறே உடற்பயிற்சிகளை மேற்கொள்வது முதல்வர் ஸ்டாலினுக்கு வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த ஜிம்மில் இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் இணையத்தை மீண்டும் கலக்கி வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் ஜிம்மில் வோர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. முன்னதாக சமீபத்தில் தான் முதல்வர் ஸ்டாலின் கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் சென்றார். அப்போது முதல்வர் ஸ்டாலினிடம் பொதுமக்கள் பேசிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.