திருவண்ணாமலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா - முதலமைச்சர் பங்கேற்பு...

Asianet News Tamil  
Published : Jul 29, 2017, 05:38 PM ISTUpdated : Sep 19, 2018, 12:57 AM IST
திருவண்ணாமலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா - முதலமைச்சர் பங்கேற்பு...

சுருக்கம்

Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy presented MGR Rural Century at Thiruvannamalai and provided welfare assistance.

திருவண்ணாமலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள நகராட்சி மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது.

இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எம்ஜிஆரின் புகைப்படங்களை திறந்து வைத்தார்.

இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை திருவண்ணாமலை வந்தடைந்தார்.

அங்கு அவருக்கு செண்டை மேளம் முழங்க பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்த எடப்பாடி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். மேலும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதில் சட்டப்பேரவை தலைவர் தனபால், மக்களவை துணை தலைவர் தம்பிதுரை, அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

PREV
click me!

Recommended Stories

ஆர்எஸ்எஸ் அமைப்பை பார்த்து கத்துக்கோங்க ராகுல் காந்தி.. காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் ட்வீட்!
மறைந்தும் வாழும் கருப்பு எம்.ஜி.ஆர்.. 'கேப்டன்' விஜயகாந்த் நினைவிடத்தில் குவியும் அரசியல் தலைவர்கள்!