தடதடக்கும் தமிழக பட்ஜெட்.... படபடக்கும் திமுக... அடித்து தூக்கும் அதிமுக..!

By vinoth kumarFirst Published Feb 14, 2020, 12:56 PM IST
Highlights

ஏழைக்குடும்பங்களுக்கு எல்.ஐ.சி.,யுடன் இணைந்து, அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் ரூ.250 கோடியில் செயல்படுத்தபட உள்ளது. இதன்மூலம், இயற்கை மரணம் அமைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும். விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் வரை இழப்பீடு; விபத்து உள்ளிட்டவற்றில் அகால மரணம் அடைவோருக்கான இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்.

ஏழைக் குடும்பங்களுக்கு எல்ஐசியுடன் இணைந்து விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

தமிழக அரசின், 2020 -21ம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த தமிழக பட்ஜெட்டில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன.

தமிழக பட்ஜெட்டின் முழுவிவரம்;- 

* ஏழைக்குடும்பங்களுக்கு எல்.ஐ.சி.,யுடன் இணைந்து, அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் ரூ.250 கோடியில் செயல்படுத்தபட உள்ளது. இதன்மூலம், இயற்கை மரணம் அமைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும். விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் வரை இழப்பீடு; விபத்து உள்ளிட்டவற்றில் அகால மரணம் அடைவோருக்கான இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்.

* அண்ணாமலை பல்கலையுடன் இணைந்த மருத்துவ கல்லூரியை அரசே ஏற்று கொண்டு, அது கடலூர் மாவட்டத்திற்கான அரசு மருத்துவ கல்லூரியாக செயல்படும்.

* முதல் தலைமுறை மாணவர்கள் கல்வி கட்டண சலுகை தொடரும். இதற்காக ரூ.506 கோடி ஒதுக்கீடு.

* சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு பங்கு மூலதன உதவி, சார்நிலை கடன் மற்றும் வெளிநாட்டுக்கடனை விடுவிப்பதற்காக மொத்தம் 3100 கோடி ஒதுக்கீடு.

* அம்மா உணவக திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 18,540.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* அரசு ஊழியர்களின் ஊதிய செலவுக்காக இந்த நிதியாண்டில் ரூ.64,208.55 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு-அவிநாசி குடிநீர் திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சென்னையில் கூவம் மற்றும் அடையாறு நதிகளை சீரமைக்க ரூ.5,439 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்.

* ரூ.4,997 விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும்.

* ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்படும்.

* நெடுஞ்சாலைத் துறையில் புதிதாக சாலைப் பாதுகாப்பு பிரிவு அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* காவிரி - குண்டாறு திட்டத்திற்கு நிலம் எடுக்க ரூ.700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்கப்படும்.

* கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் 76,927 மாணவர்கள் தனியார் பள்ளியில் அனுமதி.

* நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* டன் ஒன்றுக்கு ரூ.100 என்கிற விகிதத்தில் அரவைக் கால போக்குவரத்து மானியம் வழங்க ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நெடுஞ்சாலை துறையில் சாலைப் பாதுகாப்பிற்காக தனியானதொரு பிரிவு உருவாக்கப்படும். சென்னை, மதுரை, கோவை மாநகராட்சியில் சாலை பாதுகாப்பு பிரிவு ஏற்படுத்தப்படும்.

* மாமல்லபுரத்தின் சுற்றுலா மேம்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பதற்கான சிறப்புத் தொகுப்புத் திட்டம் 563 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

* முதலமைச்சரின் கிராமர் தன்னிறைவு வளர்ச்சித் திட்டம் என்ற புதிய 5 ஆண்டு தன்னிறைவு திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

* குடிநீர் வழங்கல் ,சுகாதாரம் கல்வி ,உணவு ,பாதுகாப்பு, அணுகு சாலை கட்டமைப்பு, இடுகாடுகள் ,தெருவிளக்குகள் ,வீட்டுவசதி ,வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் ,பாதுகாப்பு போன்றவற்றில் கிராம அளவில் தன்னிறைவு அடைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

* பணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழகத்தில் 13 இடங்களில் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் அமைக்கப்படும்.

* 2017-18ம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு 4073 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., நிலுவை தொகை உள்ளது. நடப்பு நிதியாண்டு இறுத்திக்குள் வழங்கப்படும் என நம்புகிறோம்.

* மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டின் பங்காகப் பெறப்படும் மத்திய வரிகளின் நிதிப் பகிர்வு 2019-20ம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளதினால் பெருமளவில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.

* சேலம் மாவட்டம் புத்தரகவுண்டன்பாளையம், உமையாள்புரம் ஆகிய இடங்களில் புதிதாக சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.

* பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்துக்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்வி வசதிக்காக ரூ.302.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மாமல்லபுரத்தின் சுற்றுலா மேம்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பதற்காகன சிறப்பு தொகுப்பு திட்டம் 563 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

* சென்னை பெங்களூரு தொழில் வழித்தட திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 21,966 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

* கிறிஸ்துவ தேவாலயங்கள் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடி உயர்த்தி வழங்கப்படும்.

* மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி 60 லட்சம் ரூபாயிலிருந்து 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

* ஸ்மார்ட் ரேசன் கார்டு இருந்தால் எந்த கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் விரைவில் அறிமுகம்.

* ஈரோட்டில் மஞ்சள் மையம்,தென்காசியில் எலுமிச்சைமையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம்.

click me!