கொரோனா வைரஸ்: கப்பலில் சிக்கியுள்ள கணவரை மீட்டு தாருங்கள். கலெக்டரிடம் மனைவி மனு.!!

By Thiraviaraj RMFirst Published Feb 14, 2020, 12:52 PM IST
Highlights

ஜப்பான் கப்பலில் சிக்கிக்கொண்டுள்ள 3500க்கு மேற்பட்ட நபர்களில் 138 பேர் இந்தியர்கள் அதில் 6பேர் தமிழர்கள். மதுரையை சேர்ந்த அன்பழகன் அந்த கப்பலில் சிக்கி இருக்கிறார்.எனவே அவரது  மனைவி மல்லிகா மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து என் கணவரை மீட்டு தாருங்கள் என்று மனு ஒன்றை அளித்திருக்கிறார்.

By: T.Balamurukan

கொரோனா வைரஸ் உலகத்தையே ஆட்டம் காண வைத்திருக்கிறது. இந்த பாதிப்பினால் உலகநாடுகள் வெளிநாட்டில் இருந்து வரும் கப்பல்களை நடுக்கடலில் நிறுத்தி வைத்திருக்கிறது.அப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களில் ஒன்று தான் ‘டைமண்ட் பிரின்ஸ்’.ஜப்பான் கப்பலில் சிக்கிக்கொண்டுள்ள 3500க்கு மேற்பட்ட நபர்களில் 138 பேர் இந்தியர்கள் அதில் 6பேர் தமிழர்கள். மதுரையை சேர்ந்த அன்பழகன் அந்த கப்பலில் சிக்கி இருக்கிறார்.எனவே அவரது  மனைவி மல்லிகா மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து என் கணவரை மீட்டு தாருங்கள் என்று மனு ஒன்றை அளித்திருக்கிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்க்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கொரோனா வைரஸ் நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்டு தரக்கோரி எழுதியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்தவர் அன்பழகன். இவர் டைமன்ட் பிரின்ஸ் கப்பலில் சிக்கியிருக்கிறார். இவர் சென்ற கப்பல் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக அந்த கப்பல் ஜப்பான் கடற்கரை எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. அந்த கப்பல் பிரிட்டி~; நாட்டிற்கு சொந்தமானது என்பதால் அந்த நாட்டு இந்திய தூதரகத்திற்கு திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ டாக்டர் சரவணன் இமெயில் மூலம் தகவல்களை அனுப்பியிருக்கிறார். இவருடன் அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தொடர்பில் இருந்து வருகிறார்கள் என்பது குறிபிடத்தக்கது.


இந்த நிலையில் மல்லிகா பேசும் போது..”டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து எங்களை தொடர்பு கொண்டனர். எங்களுக்கு தேவையான உதவி அளிக்கவும் உறுதியளித்துள்ளார். இன்னும் பத்துநாட்களில் வீடு திரும்புவோம் எங்களுக்கு தேவையான தெர்மோ மீட்டர் மாஸ்க் தண்ணீர் எல்லாம் வழங்கப்படுவதாகவும் அன்பழகன் வாட்ஸ்அப் வீடியோ மூலம் இதனை தெரிவித்திருக்கிறார். அன்பழகன். கப்பலில் உள்ள பயணிகளுக்கு தினந்தோறும் மருத்துவபரிசோதனை செய்யப்படுவதாக என் கணவர் கூறியிருப்பது எங்களுக்கு பயமாகவே இருக்கிறது.எனவே என் கணவரையும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களையும் தமிழக அரசு மீட்க வேண்டும் என்றார்.

click me!