பெண்களின் பாதுகாப்புக்காக அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா... பட்ஜெட்டை கண்டு வாய்பிளக்கும் திமுக..!

By vinoth kumarFirst Published Feb 14, 2020, 12:26 PM IST
Highlights

தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக தமிழக அரசுப் பேருந்துகள் நவீனமாகி வருகின்றன. அரசுப் பேருந்துகள் ஏசி, கழிப்பறை உள்ளிட்ட பேருந்துகள் மாற்றப்பட்டு வருகின்றது. சமீபத்தில் தமிழக அரசின் சார்பில் மின்சாரப் பேருந்து வசதி தொடங்கப்பட்டது. அதில் குளிர்சாதன வசதி, சிசிடிவி கண்காணிப்பு கேமரா வசதி, பேருந்து நிறுத்தத்தை ஒலிப்பெருக்கி மூலம் சொல்லும் வசதி ஆகியவை இடம்பெற்றிருந்தன.

நிர்பயா நிதித்திட்டத்தின் கீழ் அனைத்து பேருந்துகளிலும் ரூ.75.02 கோடி செலவில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என நிதியமைச்சர் ஓ.பன்னீர்செர்வம் அறிவித்துள்ளார். 

தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக தமிழக அரசுப் பேருந்துகள் நவீனமாகி வருகின்றன. அரசுப் பேருந்துகள் ஏசி, கழிப்பறை உள்ளிட்ட பேருந்துகள் மாற்றப்பட்டு வருகின்றது. சமீபத்தில் தமிழக அரசின் சார்பில் மின்சாரப் பேருந்து வசதி தொடங்கப்பட்டது. அதில் குளிர்சாதன வசதி, சிசிடிவி கண்காணிப்பு கேமரா வசதி, பேருந்து நிறுத்தத்தை ஒலிப்பெருக்கி மூலம் சொல்லும் வசதி ஆகியவை இடம்பெற்றிருந்தன.

போக்குவரத்துக் கழக நிதி நெருக்கடி, டீசல் விலை ஏற்றம் ஆகிய சிக்கலில் சின்னபின்னமாகி உள்ளது. ஆகையால், மின்சாரப் பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. எரிபொருள் பேருந்துகளை இயக்க ஆகும் செலவு, சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கருதியும் மின்சாரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், அரசு பேருந்துகளில் பாலியல் தொல்லைகள் மற்றும் குற்றச்சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று 2020-21-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில், அரசுப் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்று அறிவித்தார்.

நிர்பயா நிதித்திட்டத்தின் கீழ் அனைத்து பேருந்துகளிலும் ரூ.75.02 கோடி செலவில் அனைத்து தமிழக அரசுப் பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என அறிவித்துள்ளார். 

click me!