மின்தடை ஏன்.? தனியாரிடம் மின்சாரம் வாங்கணும்.. லாபம் பார்க்கணும்.. திமுக அரசை போட்டுத்தாக்கும் அண்ணாமலை!

Published : Apr 22, 2022, 10:31 PM IST
மின்தடை ஏன்.? தனியாரிடம் மின்சாரம் வாங்கணும்.. லாபம் பார்க்கணும்.. திமுக அரசை போட்டுத்தாக்கும் அண்ணாமலை!

சுருக்கம்

செயற்கையாக மின்தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வெளிச்சந்தையில் தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்து ஊழலில் ஈடுபடுகின்றர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இந்த மின் தடை குறித்து தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், “மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகா வாட் திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையைச் சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நிலைமை உடனடியாக சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது” என்று தெரிவித்திருந்தார். தாக என்று அவர் தெரிவித்திருந்தார். 

2 ஆயிரம் கோடிக்கு கொள்முதல்

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கடந்த 20-ஆம் தேதி மொத்தம் உள்ள 5 யூனிட்டுகளில் 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கடந்த 20-ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு இருந்துள்ளது. அப்படி இருந்தும்கூட எதற்காக 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது. தமிழகத்தில் செயற்கையாக மின்வெட்டை ஏற்படுத்தி அதன் காரணமாக தனியார் மின்சாரத்தை கொள்முதல் செய்து லாபம் பார்ப்பது திமுக அரசுக்கு கைவந்த கலை ஆகும். 2021 மார்ச் முதல் 2022 பிப்ரவரி வரை மட்டும் ரூ.2000 கோடிக்கு மேல் தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

செயற்கை மின் தடை

செயற்கையாக மின்தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வெளிச்சந்தையில் தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்து ஊழலில் ஈடுபடுகின்றர். சில சமயங்களில் தனியாரிடம் இருந்து கிலோ யூனிட்டை ரூ.20க்கு கொள்முதல் செய்ததை எல்லாம் நாம் பார்த்திருக்கிறோம். இந்த முறையும் செயற்கையாக மின்தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறார்கள். தமிழகத்துக்கு ஒரு நாளைக்கு 72,000 டன் நிலக்கரி தேவை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறார். ஆனால், 72,000 டன் நிலக்கரி தமிழகத்துக்கு எப்போது தேவை? தமிழகத்தில் இருக்கக்கூடிய 5 மின் உற்பத்தி நிலையங்களும் 85 சதவீதம் மின் உற்பத்தி செய்யம்போதுதான் 72,000 டன் நிலக்கரி தேவைப்படும்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!
தமிழக ஆளுநரை அவமதித்த மாணவிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்..! பட்டம் ரத்து செய்யப்படுகிறதா?