இரட்டை இலை சின்னத்தை பெற ரூ.50 கோடி கொடுத்தேனா... இல்லவே இல்லை என மறுக்கும் டிடிவி!!

By Narendran S  |  First Published Apr 22, 2022, 7:49 PM IST

இரட்டை இலை சின்னம் பெற இடைத்தரகர் சுகேத் சந்திர சேகருக்கு 50 கோடி ரூபாய் கொடுத்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 


இரட்டை இலை சின்னம் பெற இடைத்தரகர் சுகேத் சந்திர சேகருக்கு 50 கோடி ரூபாய் கொடுத்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையத்தில் இருந்து பெறுவதற்காக சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத் தரகர் மூலமாக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இரண்டாம் கட்ட விசாரணை இன்று தொடங்கியாது. சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் இவ்வழக்கில் தொடர்புடைய பல்வேறு கேள்விகளை அமலாக்கத் துறை அதிகாரிகள் டிடிவி தினகரன் முன் வைத்தனர். இந்த விசாரணை நிறைவடைந்ததை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், இந்த வழக்கு தொடர்பாக என்னிடம் மீண்டும் விசாரணை நடத்த அழைத்தார்கள்.

Tap to resize

Latest Videos

undefined

நானும் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தேன். இவ்வழக்கு தொடர்பாக சில ஆவணங்களை கேட்டார்கள். அதனை வழங்கினேன். பின்னர் அந்த ஆவணங்களின் அடிப்படையில் சில கேள்விகள் கேட்டனர். அதற்கும் உரிய பதிலை அளித்துள்ளேன். அடுத்த கட்ட விசாரணை எப்போது என தெரியவில்லை, தேவைப்பட்டால் மீண்டும் அழைப்பார்கள் நானும் ஆஜரவேன், என்னை பொறுத்தவரையில் என்னிடம் நடைபெற்ற விசாரணை முடிவடைந்தது என்றே நினைக்கிறேன், ஒருவேளை மீண்டும் தேவைப்படும் போது அழைத்தாலும் கூட நிச்சயமாக ஆஜராவேன். 5 வருடங்களுக்கு பிறகு இவ்வழக்கில் சுகேஷ் சந்திர சேகரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

அந்த விசாரணை அடிப்படையில் தான் இப்போது என்னிடம் விசாரணை செய்து வருகிறார்கள். சுகேஷ் சந்திர சேகருக்கு நான் 50 கோடி கொடுத்ததாக அவர் கூறுவதில் ஏந்த உண்மையும் இல்லை. மேலும், இந்த வழக்கில் அமலாக்கத்துறை என்னிடம் அத்துமீறலில் ஈடுபடுவது போல் எனக்கு தோன்றவில்லை என தெரிவித்தார். முன்னதாக இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம், 2017ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோரை டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது சுகேஷ் சந்திரசேகர் தவிர மற்றவர்கள் ஜாமீனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!