#BREAKING தமிழகத்தில் பட்டையை கிளப்பபோகும் ஒவைசி கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கீடு.. தேர்தல் ஆணையம் அதிரடி.!

By vinoth kumarFirst Published Mar 5, 2021, 5:02 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப்போகும் அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு பட்டம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப்போகும் அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு பட்டம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 

கடந்த நவம்பரில் நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளில் வென்று நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. இதனால் தான் பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது. பீகாரைத் தொடர்ந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகம், மேற்குவங்கத்தில் போட்டியிடப் போவதாக அசாதுதீன் ஒவைசி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2016 பேரவைத் தேர்தலில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி ஆகிய இரு தொகுதிகளில் ஒவைசி கட்சி போட்டியிட்டு 10,289 வாக்குகளைப் பெற்றது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத ஒவைசி கட்சி, வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக பேரவைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதனால் தமிழகத்தில் முஸ்லிம்களின் வாக்குகள் குறிப்பாக உருது பேசும் முஸ்லிம்கள் வாக்குகள் பிரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் போட்டியிடும் அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் மேற்கு வங்கத்திலும் பட்டம் சின்னத்தை தேர்தல் ஆணையம்  ஒதுக்கீடு செய்துள்ளது. 

click me!