அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் 6/50... பாஜக மூலம் தடை போட்ட டி.டி.வி.தினகரன்..!

By Thiraviaraj RMFirst Published Mar 5, 2021, 4:48 PM IST
Highlights

 50 தொகுதிகளாக அறிவிக்கப்பட இருந்த முதல் வேட்பாளர் பட்டியலில் 6 தொகுதிகளை மட்டுமே அதிமுக அறிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. அதன்படி, 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. போடி தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி தொகுதியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி சண்முகம், ஸ்ரீ வைகுண்டம் தொகுதியில் எஸ்.பி சண்முகநாதன், மற்றும் நிலக்கோட்டை தொகுதியில் திருமதி தேன்மொழி ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆவது முறையாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். 5 ஆவது முறையாக சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். 7 ஆவது முறையாக சென்னை மாவட்டம் ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அமைச்சர் ஜெயகுமார் போட்டியிடுகிறார். ஆனால், அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியலில் 50 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருந்ததாக கூறப்படுகிறது.

 

ஆனால், டி.டி.வி.தினகரனை அதிமுக கூட்டணியில் இணைக்க இன்னும் தொடர்ந்து பாஜக அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. அமமுகவுக்கு 20 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அதிமுகவுக்கு பாஜக அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே 50 தொகுதிகளாக அறிவிக்கப்பட இருந்த முதல் வேட்பாளர் பட்டியலில் 6 தொகுதிகளை மட்டுமே அதிமுக அறிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

click me!