வீரியமடையும் விவசாயிகளின் போராட்டம் - தமிழகம் புதுவையில் மாணவர்கள் போர்க்கொடி

 
Published : Apr 03, 2017, 10:54 AM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
வீரியமடையும் விவசாயிகளின் போராட்டம் - தமிழகம் புதுவையில் மாணவர்கள் போர்க்கொடி

சுருக்கம்

Tamil Nadu and Puducherry to support struggling farmers

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போராட்டம் வெடித்துள்ளது. 

பயிர்க்கடன் தள்ளுபடி, காப்பீடு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் தொடர்ந்து 21 வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று தலைமைுடியை பாதியாக மொட்டை அடித்து விவசாயிகள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். இன்று தாடி மற்றும் மீசையையும் மழித்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். 

மீண்டும் வெடித்த மாணவர்கள் போராட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை சூலூர் பகுதியில் விவசாயிகள், அரசியல் கட்சி சாராத வணிகர்கள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் அதிகமானோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளனர்.புதுவை சட்டக் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து விடுதி வளாகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும் என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்