தமாகாவில் இருந்து விலகிய அசோகன்! எந்த கட்சியில் இணைந்தார் தெரியுமா? அதிர்ச்சியில் ஜி.கே.வாசன்.!

By vinoth kumar  |  First Published Feb 29, 2024, 1:12 PM IST

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா தலைமை நிலைய செயலாளர் அசோகன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.


பாஜக உடன் கூட்டணி வைத்ததை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸில் இருந்து விலகிய தலைமை நிலையச் செயலாளர் அசோகன் செல்வப்பெருந்தகை முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டார். ஜிகே வாசன், பாஜகவுடன் கூட்டணி அறிவித்ததுமே அக்கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், மரியாதை நிமித்தமாகவே இபிஎஸ்-ஐ சந்தித்தாக தெரிவித்தார். 

Latest Videos

undefined

இதையும் படிங்க: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு சிக்கல்? அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி!

இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா தலைமை நிலைய செயலாளர் அசோகன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் நீங்கள் எடுத்துள்ள பாஜக கூட்டணி என்பது எனக்கு உளவியல் ரீதியாக ஏற்புடையதாக இல்லை. எனவே கனத்த இதயத்துடன் தமாகாவில் விலகுவததாகவும், என்னுடைய முடிவை ஏற்றுக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அசோகன் தெரித்திருந்தார்.

இதையும் படிங்க:  ஓபிஎஸ் இல்லாமல் கூட்டணியா? தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு நிச்சயம் அதிர்ச்சியை தரும்.! சீறும் மருது அழகுராஜ்.!

இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸில் இருந்து விலகிய அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் அசோகன் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். நேற்று சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 

click me!