நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் கேட்டுள்ளதாக தெரிவித்த மதிமுகவினர் அதில் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அடுத்த மாதம் மத்தியில் அறிவிக்கப்படவுள்ளது. இந்தநிலையில் திமுக தங்களது கூட்டணி கட்சியினரோடு தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் முஸ்லிம் லீக் மற்றும் கொமதேகவிற்கு தலா ஒரு தொகுதியை ஒதுக்கியது. இதனையடுத்து கூட்டணி கட்சியோடு இரண்டு கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தையை திமுக நடத்தியது. அந்த வகையில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மதிமுகவிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலை உருவாகியுள்ளது.
ஏற்கனவே இரண்டு மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியானது கேட்ட நிலையில், இன்றைய 3ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஒரு மக்களவை மற்றும் மாநிலங்களவை தொகுதியை கேட்டது. மேலும் கடந்த முறை போல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என அறிவித்துள்ளது. தங்களது பம்பரம் சின்னத்தில் போட்டியிட இருப்பதாகவும் தெரிவித்து விட்டது. இதன் காரணமாக தொகுதி பங்கீடு செய்வதில் முன்னேற்றம் ஏற்படாத நிலை உருவாகியுள்ளது. இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக மதிமுக நிர்வாகி கூறுகையில், இன்றைய பேச்சுவார்த்தையில் ஒரு மக்களவை மற்றும் மாநிலங்களவை கேட்டுள்ளோம். அதுவும் எங்களது சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என இறுதியாக, உறுதியாக கூறியுள்ளோம். இந்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும்.
எங்களது கோரிக்கைக்கு திமுக எந்தவித பதிலும் சொல்லவில்லை, தலைமையிடம் பேசிவிட்டு கூறிவிட்டனர். எனவே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம். ஒரு வேளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தினால் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கூறினார். மேலும் மாநிலங்களவை தொகுதி கொடுப்பதையும் திமுக உறுதியாக சொல்வில்லையெனவும் கூறினார்.