இந்திய அளவில் தமிழ் மொழி தான் இணைப்பு மொழி...! அமித்ஷாவிற்கு பதிலடி கொடுத்த ஜெயக்குமார்..

Published : Apr 13, 2022, 04:52 PM ISTUpdated : Apr 13, 2022, 04:55 PM IST
இந்திய அளவில் தமிழ் மொழி தான் இணைப்பு மொழி...! அமித்ஷாவிற்கு பதிலடி கொடுத்த  ஜெயக்குமார்..

சுருக்கம்

சசிகலா பெருந்தன்மையாக அரசியலில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

மனித உரிமையை மீறிய காவல்துறை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் வாக்கு சாவடியை கைப்பற்றியதாக வந்த தகவலையடுத்து அந்த பகுதிக்கு சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அங்கிருந்த திமுக பிரமுகரை அரைநிர்வாணப்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து ஜாமினில் வெளியே வந்தவர் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்தநிலையில் தன்னை கைது செய்த போது மனித உரிமை மீறப்பட்டதாக கூறி மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான குற்றச்சாட்டை வைத்து தன் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறிய அவர், சமூக விரோதியான நரேஷ் என்பவர் மூலம் ஒரு பொய்யான புகாரை அளிக்க வைத்து தன்னை கைது செய்ததாக கூறினார். அது மட்டுமின்றி மனித உரிமையை மீறி அத்துமீறி தன் வீட்டிற்குள் நுழைந்து தன்னை கைது செய்ததாக குற்றம் சாட்டிய ஜெயக்குமார், தன்னிடம் அத்து மீறி நடந்து கொண்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழ் மொழி தான் இணைப்பு மொழி

தொடர்ந்து பேசிய அவர், ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, ரெட் ஜெயன்ட் மூவிஸ், திரைத்துறையில் சிறிய தயாரிப்பாளர்களின் படங்களை கபளீகரம் செய்து வருவதாக கூறினார்.  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும்போதே தனக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என சசிகலா எழுதிக் கொடுத்த பின் தான் வீட்டிற்குள் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக கூறினார்.எனவே அதே நிலையில் தொடர்ந்து இருந்தால் நல்லது என்றார். எனவே சசிகலா தற்போது வந்த தீர்ப்புக்கு பிறகு  பெருந்தன்மையாக ஒதுங்குவது தான் நல்லது என தெரிவித்தார்.அமமுக வாக்கு விகிதம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொண்டதாகவும் கூறினார்.  அதிமுகவிற்கு தான் மக்கள் ஆதரவு இருப்பதாகவும் ஜெயக்குமார் கூறினார். தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் இருமொழிக் கொள்கை தான் உயிர்நாடி என குறிப்பிட்டவர் இதற்காக  எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியதாக கூறினார். உலகம் தோன்றியதும் உடனே தோன்றிய மொழி தமிழ் மொழி என குறிப்பிட்ட அவர்,  இந்திய அளவில் இணைப்பு மொழியாக தமிழ் மொழி இருப்பதுதான் மிகச் சிறந்த விஷயமாக இருக்கும் என தெரிவித்தார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நீதிபதிகளை மிரட்ட வெட்கமில்லையா..? ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஒன்று திரளும் நீதிபதிகள்..!
இந்தியா முழுவதும் பாகிஸ்தான் கொடியை ஏற்றுவோம்...! யாராலும் எங்களை தடுக்க முடியாது..! LET பயங்கரவாதி கொக்கரிப்பு..!