தாஜ் மகாலை வெடி வைத்து தகர்க்க சதி நடக்கிறது !! உத்தரபிரதேச முன்னாள் அமைச்சர் ஆசம் கான் கடும் குற்றச்சாட்டு !!!

 
Published : Oct 19, 2017, 08:01 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
தாஜ் மகாலை வெடி வைத்து தகர்க்க சதி நடக்கிறது !! உத்தரபிரதேச முன்னாள் அமைச்சர் ஆசம் கான் கடும் குற்றச்சாட்டு !!!

சுருக்கம்

taj mahal asam khan

தாஜ்மகால் அடிமைகளின் சின்னம் என்றும் அந்த இடத்தில் இந்துபோவில் இருந்தது என்றும் கூறி, அந்த உலக அதிசயத்தை வெடி வைத்து தகர்க்க சசி நடப்பதாக உத்தரபிரதேச முன்னாள் அமைச்சர் ஆசம் சான் குற்றம்சாட்டியுள்ளார்.

துரோகிகளால் தாஜ் மஹால் கட்டப்பட்டு இருப்பதாகவும், அதை இந்திய வரலாற்று சின்னமாகவோ, நினைவு சின்னமாகவோ ஏற்க முடியாது, அது ஒரு அடிமை சின்னம் என்றும் உத்தர பிரதேச பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம் கூறினார்.

இதற்ழ பதிலடி கொடுக்கும் வகையில் தாஜ் மஹாலை கட்டியது துரோகிகள் என்றால், டெல்லி செங்கோட்டையையும் துரோகிகள்தான் கட்டியுள்ளனர். அதனால் அங்கு தேசியக் கொடியை ஏற்றுவதை மோடி நிறுத்துவாரா? என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளரும் உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் அமைச்சரும், சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்கு பெயர் போனவருமான ஆசம் கான், தனது காரசாரமான கருத்தை பதிவு செய்திருந்தார். 



அடிமைச் சின்னங்கள் அனைத்தும் அழிக்கபட வேண்டும் என நான் எப்போதுமே கருதி வந்துள்ளேன். அவ்வகையில், தாஜ் மஹால் மட்டுமல்லாமல், டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை, செங்கோட்டை, பாராளுமன்ற கட்டிடம், குதுப்மினார் போன்றவையும் அடிமை சின்னங்கள் என்பதால், அவற்றையும் அழிக்க வேண்டும் என்று ஆசம் கான் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் ராம்பூரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆசம் கான், தாஜ் மஹாலை வெடிவைத்து தகர்க்க சதி திட்டம் உருவாகி வருவதாக குறிப்பிட்டுள்ளார். 

பாபர் மசூதி விவகாரத்திலும் முன்னர் இதேபோல் ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டது. பின்னர், நீதிமன்ற  உத்தரவையும் மீறி பாபர் மசூதி இடித்து தள்ளப்பட்டது.

அதேபோல், உலகில் உள்ள ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை வெடி வைத்து தகர்ப்பதற்கான சூழ்நிலையையும், நிர்பந்தத்தையும், நியாயத்தையும் பாஜக அரசு உருவாக்கி வருகிறது என்று ஆசம் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

எம்ஜிஆர், ஜெ. காலத்தில் இருந்த வரவேற்பு.. TVKவில் மனமகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.. செங்கோட்டையன் ஓபன் டாக்
ஜனவரியில் அதிர்ச்சி..! தவெக மற்றொரு அதிமுகவாக மாறும்..! இனிமேல் அதிமுக கிடையாது..! செங்கோட்டையன் சூளுரை..!