மே.வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை  கொலை செய்ய ரூ.65 லட்சம் பேரம்…..

First Published Oct 18, 2017, 7:44 PM IST
Highlights
somebody try to murder mamtha banerji


மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை கொலைசெய்ய 19வயது இளைஞர் ஒருவருக்கு ரூ. 65 லட்சம் பேரம் பேசி அமெரிக்காவில் இருந்து வாட்ஸ்அப் செய்தி வந்துள்ளது. இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

முர்சிதாபாத் மாவட்டம், பெர்ஹாம்பூர் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவருக்கே இந்த வாட்ஸ்அப் செய்தி வந்துள்ளது.

இது குறித்து அந்த கல்லூரி மாணவர் கூறுகையில், “ திங்கள்கிழமை நண்பகல் நான் வகுப்பில் அமர்ந்திருந்தேன். சரியாக 1.10 மணிக்கு யாரென்ற தெரியாத ஒரு எண்ணில் இருந்து, அந்த வாட்ஸ் ெசய்தி வந்தது. அதில்  நாங்கள் தீவிரவாதிகளுக்காக உதவும் அமைப்பைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு உதவ ஒரு ஆள் தேவை. நாங்கள் உனக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்(ரூ.65 லட்சம்) தருகிறோம். நீங்கள் முதல்வர் மம்தா பானர்ஜியை கொலை செய்ய வேண்டும். உங்களுக்கு ஒன்றும் நடக்காது, பாதுகாப்பாக நாங்கள் பார்த்துக்கொள்வோம். தயாராக இருக்கிறீர்களா என்று கேட்டனர்.

அதற்கு நான் பதிலுக்கு காத்திருங்கள் என்று கூறி பதில் அனுப்பினேன். அவர்கள் மீண்டும் விரைவாக செய்ய வேண்டும், இல்லாவிட்டால், அடுத்த நபருக்கு இதை மாற்றிவிடுவோம். வீணாக ரூ. 65லட்சத்தை இழந்துவிடாதே எனக் கூறினர். அதன்பின் எனக்கு உங்கள் உதவி தேவையில்லை எனக் கூறி தொடர்பைத் துண்டித்தேன்.

பின் நண்பகல் 2.46 மணிக்கு அந்த நபர் செல்போன் எண் இணைப்பில் வந்தார். அவர் எண்ணிடம், “ நீ ரூ.65 லட்சத்தை இழந்துவிட்டாய் என்றனர். அதற்கு நான் உங்களுக்காக நான் தீவிரவாதியாக மாறமுடியாது என்றேன்.

அந்த நபர் பேசுகையில், “ முதல்வர் மம்தா பானர்ஜியை கொலை செய்ய ஒரு ஆள் தேவை. அதான் உன்னை தேர்வு செய்தோம். இந்த தகவலை போலீசிடம் கூற முயற்சிக்காதே. எங்களூடைய நபர் உன்னை கவனித்து வருகிறார். நீ போலீஸ் நிலையம் சென்றால், உன்னை கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டினர். அதன்பின் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டேன். கல்லூரி முடிந்தபின், போலீஸ் நிலையம் செனஅறு நடந்த விஷயங்களைத் தெரிவித்தேன்” எனத் தெரிவித்தார்.

இது குறித்து போலீஸ் ஐ.ஜி. அஜெய் ராணடே கூறுகையில், “ அந்த கல்லூரி மாணவரிடம் இருந்து புகாரைப் பெற்றுள்ளோம். அந்த மாணவரின் செல்போனை ்ஸ்விட்ச் ஆப் செய்யக் கூறியுள்ளோம். வாட்ஸ்அப் செய்தி வந்த எண் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

 

click me!