நிலவேம்பு குடிநீர் பாதுகாப்பானதா? தமிழக அரசு சரியான விளக்கம் அளிக்குமா ? மு.க.ஸ்டாலின் கேள்வி !!!

 
Published : Oct 19, 2017, 07:36 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
நிலவேம்பு குடிநீர் பாதுகாப்பானதா? தமிழக அரசு சரியான விளக்கம் அளிக்குமா ? மு.க.ஸ்டாலின் கேள்வி !!!

சுருக்கம்

dengue ....m.k.staline Question to tamilnadu govt

தமிழகத்தை அச்சுறுத்தும் டெங்கு நோய்க்கு மருந்தாக தமிழக அரசு வழங்கி வரும் நிரவேம்பு குடிநீர் பாதுகாப்பானதா ? என தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிக அளவில் உள்ளதால்,  இதனை கட்டுப்படுத்த நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது.

தமிழக அரசும் மாநிலம் முழுவது அங்காங்கே நிலவேம்பு கசாயத்தை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், நிலவேம்பு மலட்டுத்தன்மை போன்ற பக்கவிளைவுகலை ஏற்படுத்தும் என செய்தி வெளியாகியது.  

டெங்கு குறித்து ஆய்வு செய்வதற்காக  தமிழகம் வந்த மத்திய மருத்து குழு, இந்நோய்க்கு மருந்தாக நிலவேம்பு குடிநீரை தாங்கள் சிபாரிசு செய்யப் போவதில்லை என தெரிவித்தனர்

இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு, நிலவேம்பு குடிநீர் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும், என்றும், இது ஆராய்ச்சியின் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது.

நடிகர் கமலஹாசன், டுவிட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், ஆராய்ச்சி முடிவுகள் வரும் வரை யாரும் நிலவேம்பு குடிநீர் விநியோகிக்க வேண்டாம் என  தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நிலவேம்பு குடிநீர் பாதுகாப்பானதா? அதனால் பக்க விளைவுகள் ஏற்படுமா என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

PREV
click me!

Recommended Stories

ஓட்டுக்காக மாணவர்களுக்கு லேப்டாப்..! முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!
லாட்டரி மார்ட்டின் மகளை ஏமாற்றி திருமணம் செய்தவர் ஆதவ் ஆர்ஜூனா..! விஜய் EX மேலாளர் பகீர் குற்றச்சாட்டு..!