தன் ரசிகர்களையே அவமானப்படுத்திய ரஜினி..!! கிழி கிழியென கிழித்து தொங்கவிட்ட தி . வேல்முருகன்..!!

By Ezhilarasan BabuFirst Published Feb 25, 2020, 2:52 PM IST
Highlights

இந்நிலையில்  இதை சுட்டிக்காட்டிய தி. வேல்முருகன் பல லட்சக்கணக்கான மக்களின் மனங்களைக் கவர்ந்த கருணாநிதி தன்னுடைய 93 ஆவது வயதிலும்  நீதிமன்றம் சென்றபோது ,  ஒரு நடிகர் வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்பது ,  அபத்தமானது .  ஏற்றுக்கொள்ள முடியாதது . 

தம்மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகாக 93 வயதிலும் மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜரானார் ,  ஆனால் நடிகர் ரஜினிகாந்த் வழக்கில் ஆஜராக மறுத்து ஓடி ஒளிகிறார் என தி.வேல்முருகன் ரஜினிகாந்தை குற்றம்சாட்டியுள்ளார் .  ரஜினியின் இந்த  நடவடிக்கை அவரது ரசிகர்களை அவமதிக்கும் செயல் எனவும் வேல்முருகன் சுட்டிக்காட்டியுள்ளார் .  திமுக தலைவர் மு.க ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி வேல்முருகன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார் ,  பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறினார் . தொடர்ந்து பேசிய அவர் . 

 தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு கேட்டு நடிகர் ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்திருந்தார்,   தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் ,  இந்நிலையில்  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சில சமூக விரோதிகள் காரணம். போலீஸை மட்டும் குறை கூறுவது தவறு என ரஜினி பேட்டியளித்திருந்தார் .  இதையடுத்து இந்த வழக்கில் ஆஜராகுமாறு ரஜினிகாந்துக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது . இந்நிலையில் வழக்கில்  நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ரஜினி மனு தாக்கல் செய்திருந்தார் . 

இந்நிலையில்  இதை சுட்டிக்காட்டிய தி. வேல்முருகன் பல லட்சக்கணக்கான மக்களின் மனங்களைக் கவர்ந்த கருணாநிதி தன்னுடைய 93 ஆவது வயதிலும்  நீதிமன்றம் சென்றபோது ,  ஒரு நடிகர் வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்பது ,  அபத்தமானது .  ஏற்றுக்கொள்ள முடியாதது .  ஆஜராக முடியாது என்பதற்கு அவர் கூறிய காரணம் அவருடைய ரசிகர்களை அவமானப்படுத்தும் ,  அசிங்கப்படுத்தும் செயல் என வேல்முருகன் கூறினார் .  கடந்த 2016ம் தன் மீது  தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் விளக்கமளித்த திமுக தலைவராக இருந்த கருணாநிதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வந்தார் . ஆனால்  நடிகர்  ரஜினிகாந்த் தான் நேரில் ஆஜரானால்  சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் எனவே நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது . 
 

click me!