நீதியரசர்களுக்கு வந்த சோதனை.!! பன்றிக்காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதி..!!

By Ezhilarasan BabuFirst Published Feb 25, 2020, 2:13 PM IST
Highlights

இதையடுத்து அவர்களுக்கு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .  இதுதொடர்பாக  நீதிபதி சந்திரா சூட் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை ஒன்று வைத்தார்.
 

இந்திய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 6 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது .  நீதித்துறையில் உள்ள முக்கிய நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மருத்துவமனைகளில்  அனுமதிக்கப்பட்டனர் ,  பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில்  பன்றிக்காய்ச்சலால் அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிவந்தது ,   இதையடுத்து அவர்களுக்கு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .  இதுதொடர்பாக  நீதிபதி சந்திரா சூட் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை ஒன்று வைத்தார். 

அதில்,   சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 6 பேர் திடீரென பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் ,  இந்நிலையில் நீதிமன்ற ஊழியர்களுக்கு மருத்துவ பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தார் ,  இதையடுத்து  வழக்கறிஞர்கள் சங்கங்கள்,  மற்றும் நீதிபதிகளுடன்   தலைமை நீதிபதி  எஸ்.ஏ பாப்டே  ஆலோசனை நடத்தினார் இந்நிலையில் விரைவில் நீதிமன்ற வளாகத்தில் ஊழியர்கள்,  வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.  
 

click me!