
பன்னீர் செல்வம் முதல் அமைச்சராக பதவி வகித்த போது ஏன் நீதிவிசாரணை கோரவில்லை என்று லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் டி.ராஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்…..
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ அப்போலோ மருத்துவமனையில் ஜெயயலிதா சிகிச்சை பெற்ற போது பன்னீர் செல்வம் ஏன் அமைதியாக இருந்தார். முதல் அமைச்சராக பன்னீர் செல்வம் பதவி வகித்த போது அவர் தான் மிரட்டப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது.
பி.எச்.பாண்டிடன் உள்ளிட்ட ஓ.பி.எஸ்.அணியினர் இத்தனை நாட்கள் அமைதி காத்தது ஏன்? ஜெயலலிதா மரணம் குறித்து பொதுமக்களே விசாரணை நடத்தி விட்டனர்.
டி.ராஜேந்திரனின் இத்தகைய அடுக்கடுக்கான கேள்விகளுக்கு ஓ.பி.எஸ். தரப்பின் பதில் என்ன?