அதிமுக அழிந்து விட்டது..! திமுக அழிகிறது...! - பொன்.ராதா சீரியஸ் பேட்டி.

 
Published : Mar 04, 2017, 12:20 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
அதிமுக அழிந்து விட்டது..! திமுக அழிகிறது...! - பொன்.ராதா சீரியஸ் பேட்டி.

சுருக்கம்

Destruction of the AIADMK and DMK pon Minister said that it was destroyed.

அதிமுக அழிந்துவிட்டதாகவும், திமுக அழிந்து கொண்டிருப்பதாகவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் பேட்டியளித்த அவர் இதனைத் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து தெரிந்து கொள்ளாமல் எதிர்ப்பது தமிழகத்திற்கு நன்மை அல்ல. நீட் தேர்வு மூலம் அகில இந்திய அளவில் போட்டியிடும் அளவுக்கு மாணவர்கள் திறமை பெறுவர்.

கல்வியைப் பற்றி தமிழக அரசுக்கு கவலை இல்லாததால் தான் நீட் தேர்வு வேண்டாம் என்கிறது…நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு நன்மையே ஏற்படும்… தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக அழிந்துவிட்டது. திமுக அழிந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்….

ஒட்டுமொத்த தமிழகமே எதிர்ப்பு தெரிவிக்கும் ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு ஆகியவற்றுக்கு தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரவாக பேசியிருப்பது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு