கட்சிப் பதவிகளை விற்றாரா அதிமுக எம்எல்ஏ? வட்டச் செயலாளர் 5 லட்சம்…. பகுதி செயலாளர் 15 லட்சம் ! கடுப்பில் எடப்பாடி !!

Published : Jul 09, 2019, 10:40 PM IST
கட்சிப் பதவிகளை விற்றாரா அதிமுக எம்எல்ஏ? வட்டச் செயலாளர் 5 லட்சம்….  பகுதி செயலாளர் 15 லட்சம் !  கடுப்பில் எடப்பாடி !!

சுருக்கம்

அதிமுகவின் தென் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளரும் தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சத்யா தனது மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை கடந்த வாரம் நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்தார். இந்த புதிய பதவிகளுக்கு அவர் செமையா கலக் ஷன் பார்த்துவிட்டார்  என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை  தி.நகர் பகுதியைச் சேர்ந்த நூற்றுகும் மேற்பட்டோர் திடீரென  அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கான காரணம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

அதாவது சென்னை வடக்கு மாவட்டச் செயலாளரும் தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சத்யா, கட்சிப் பதவிகளை பணத்துக்கான விற்றுவிட்டார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் கவுன்சிலர்கள் இல்லாததால் ஆளுங்கட்சி வட்டச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள் பதவிகளைக் கைப்பற்ற கடுமையான போட்டி நடக்கிறது.

இதில் சத்யா மட்டும் சுமார் 40க்கும் மேற்பட்ட வட்டச் செயலாளர்களை மாற்றியுள்ளார். வட்டச் செயலாளர் பதவி ஐந்து லட்சம் ரூபாய்க்கும், பகுதிச் செயலாளர் பதவி பதினைந்து லட்சம் ரூபாய்க்கும் விற்கப்பட்டிருக்கின்றன. 

மேலும் இம்மாவட்டத்தில் முன்னாள் மாசெ. ஆதிராஜாராம், கோகுல இந்திரா, வளர்மதி ஆகியோரின் ஆதரவாளர்களையெல்லாம் நீக்கிவிட்டு, தன்னுடைய ஆதரவாளர்களாகப் பார்த்து நியமித்திருக்கிறார் சத்யா. அதனால் அவர்களும் தலைமையிடம் கடுமையாக நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் கடுப்பான எடப்பாடி பழனிசாமி விரைவில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!