”திமுக கோட்டையில் வெள்ளம்”!! சென்னைவாசிகள் ட்விட்டரில் ஆவேசம்...

By manimegalai aFirst Published Nov 22, 2021, 12:24 PM IST
Highlights

திமுகவின் கோட்டையான சென்னை தி.நகர் இன்று வரை வெள்ளக்காடாக இருக்கிறது. எப்பொழுது தான் சரி செய்வீர்கள் என்று கடுப்பான சென்னைவாசிகள், படம் மற்றும் வீடியோவை முதல்வருக்கும், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ட்விட்டரில் டேக் வருகின்றனர்.

 

சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சென்னை திமுகவின் கோட்டை என்று மார்தட்டிக் கொள்ளும் திமுகவினர், சென்னையை பரிதாபமான நிலைக்கு கொண்டு செல்கின்றனர் என்று வருத்தப்படுகிறார்கள் பொதுமக்கள். சென்னையின் மிக முக்கிய வர்த்தக பகுதியான தியாகராய நகரும் மழை வெள்ளத்தில் தப்பவில்லை.இன்று அதிகாலை பெய்த 50 மில்லி மீட்டர் மழைக்கே தப்பவில்லை. வெறும் 50 மி.லி மழைக்கே தாங்காத பகுதியாக தி.நகர் மாறியிருக்கிறது. ஒரு நாள் மழைக்கே தாங்காத திநகர், திமுகவினரின் கண்களுக்கு தெரியவில்லையா என்று கேள்வி எழுப்புகின்றனர்.

 

மழை பெய்ந்து ஓய்ந்தும் கூட, இன்னும் பல இடங்களில் நீர் வடியவில்லை என்று  குற்றஞ்சாட்டுகின்றனர் தி.நகர் வாசிகள். அடையாற்றில் இருந்து வெளியேறும் வெள்ளநீர் தி. நகருக்குள் நுழைந்துள்ளது. இதனால் பேருந்து நிலையத்தின் உள்ளே முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. தி.நகர் மார்க்கெட், நடேசன் தெரு ஆகிய இடங்களில் தேங்கியுள்ள மழை நீரில் கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. 

 

ஒரு புறம் உணவுப் பொருட்கள் இன்றி மக்கள் தவித்து வரும் நிலையில், மற்றொரு புறம் வெள்ளத்தால் உணவுப் பொருட்கள் வீணாகியுள்ளன. முதல்வர் மு.க ஸ்டாலின்  தி.நகர் பகுதியில் கடந்த வாரம் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், ‘ ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. இந்த திட்டம் அமல்படுத்துவதற்காக மத்தியஅரசிடம் இருந்து பெறப்பட்ட நிதியில் ஊழல் நடந்துள்ளது.  முன்னாள் அமைச்சர் கமிஷன் பெற்றுள்ளார். பணிகள் முறையாக நடைபெறாமல் உள்ளதால் ஒப்பந்ததாரர் மீது நிச்சயம் நடவடிக்கை  எடுக்கப்படும். மழை மீட்பு பணிகள் முடிந்த பின் இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறி இருந்தார். 

முதல்வர் வந்து ஒரு வாரம் ஆன நிலையிலும் மழை நீர் தேங்கி கொண்டுதான் இருக்கிறது என்று புலம்புகின்றனர் சென்னை மக்கள். தி.நகரில் வீடு,கடை,அலுவலகம் மட்டுமல்லாமல் நட்சத்திர ஹோட்டல்களிலும் வெள்ளம் புகுந்துள்ளது. ஜெனரேட்டர்களில் மழை நீர் புகுந்ததால் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஹோட்டல்களில் தங்கியிருந்தவர்கள் உடனடியாக வெளியேறிவருகின்றனர்.கடந்த ஒரு வாரம் ஆகியும் இன்னும் மழை நீர் வடியாததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். 

இதனால் கடுப்பான சென்னைவாசிகள் ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலினுக்கும், மாநகராட்சி ஆணையருக்கு டேக் செய்து தண்ணீர் சாலையில் தேங்கி கிடைக்கும் காட்சிகளை பதிவிட்டு வருகின்றனர். தி.நகர் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இனி நான் ஸ்கூலுக்கு எப்படி போகபோறேனே தெரியல நீந்தி தான் போகணும் போல, மக்கள் சொத்தை கொள்ளையடிச்சுட்டு யாரும், மக்களை கண்டுகிறதே இல்லை,இதுல இந்த பிரச்சனை எப்படி முடியும் ? , பேசாம மீன் மாதிரி பொறந்திருந்தா நீந்திக்கிட்டே இருக்கலாம்.எவ்வளவு மழை வந்தாலும் பாத்துக்கலாம் என்றும் பதிவிட்டு வருகின்றனர். அரசு இயந்திரம் இருக்கிறதா ? தூங்குகிறதா ? என்றும், உங்கள் பகுதியில் 5 அடி வரையில் தான் வெள்ளம்  இருக்கிறதா ? எங்கள் பகுதியில் 8 அடிக்கு மேல் இருக்கிறது, அரசு நம்மை கவனிக்குமா ? என்றும் பல்வேறு கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர் சென்னைவாசிகள்.

 

click me!