எங்களிடமும் சீப்பு இருக்கு... நாங்களும் தலையை சீவுவோம்... துணை முதல்வர் ஓபிஎஸும் வெளிநாடு செல்ல அதிரடி திட்டம்?..

By Asianet TamilFirst Published Sep 11, 2019, 7:50 AM IST
Highlights

தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் தொழில்நுட்பங்களை அறிந்து வரவும் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு சென்றுவந்தார். அவரோடு அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், எம்.சி. சம்பத், ராஜேந்திரபாலாஜி, விஜயபாஸ்கர்கள் ஆகியோரும் சென்றுவந்தனர்.
 

தமிழக முதல்வர், அமைச்சர்கள் பலரும் வெளி நாடு சென்று வந்துள்ள நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் விரைவில் வெளி நாடுகள் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதா ஆட்சியில் இருந்த காலத்தில் ஒரு வெளி நாடுகூட சென்றதில்லை. அமைச்சர்கள் சொந்த விஷயமாக செல்ல வேண்டும் என்றாலும் ஜெயலலிதா அனுமதி இல்லாமல் செல்ல முடியாது. ஆனால், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் தொழில்நுட்பங்களை அறிந்து வரவும் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு சென்றார். அவரோடு அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், எம்.சி. சம்பத், ராஜேந்திரபாலாஜி, விஜயபாஸ்கர்கள் ஆகியோரும் சென்றனர்.
இதேபோல அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்துக்கு சென்றுவந்தார். அதற்கு முன்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் வெளிநாடு சென்றுவந்ததார். வெளிநாடு சுற்றுப்பயணங்களை முடித்துக்கொண்டு சென்னை வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நீர் மேலாண்மைப் பற்றி அறிந்துவர, விரைவில் இஸ்ரேல் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார். முதல்வர், அமைச்சர்கள் என பலரும் துறை சார்ந்து வெளிநாடுகள் சென்றுவரும் நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதில் ஆர்வம் காட்டாமல் இருந்துவந்தார்.
இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் விரைவில் வெளி நாடு செல்ல திட்டமிட்டுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓ.பன்னீர்செல்வம் நிதி அமைச்சராக மட்டும் அல்லாமல் வீட்டுவசதி துறை அமைச்சராகவும் இருக்கிறார். இவருடைய துறையின் கீழ்தான் சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழுமம் வருகிறது. எனவே தமிழகத்தில் குறைந்த செலவில்  ஏழைகளுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவது தொடர்பாகவும் அதில் நவீன வசதிகள் மேற்கொள்வது, மார்க்கெட்டு, பேருந்து நிலையங்கள் அமைப்பது மற்றும் நவீனப்படுத்துவது தொடர்பாக வெளி நாடுகளுக்கு சென்று பன்னீர்செல்வம் ஆய்வு செய்ய திட்டமிட்டுவருவதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பணிகளுக்காக துணை முதல்வர் சீனா மற்றும் சிங்கப்பூரில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களைச் சென்று பார்வையிட்டு திட்டம் வகுக்க பயணம் வகுக்கப்பட்டுவருவதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தோடு, அதிகாரிகள் குழு மற்றும் பத்திரிகையாளர்களும் அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் கோட்டை வட்டாரங்கள் பரபரக்கின்றன.

click me!