Swine Flu: மீண்டும் தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல்.. 2 பேருக்க தொற்று.. 13 பேருக்கு சோதனை.. அலறும் கோவை.

By Ezhilarasan BabuFirst Published Nov 16, 2021, 10:22 AM IST
Highlights

மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படுவது இந்த நோயின் பாதிப்பாக உள்ளது. பன்றிக்காய்ச்சல் தாக்கியவர்களுக்கு டாமி புளு, ரிலின்ஸா ஆகிய மாத்திரைகள் அளிக்கப்படுகிறது.  இந்த நோய் தாக்கிய 48 மணி நேரத்துக்குள் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது 5 முதல் 7 நாட்கள் வரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக தலைகாட்டாமல் இருந்த பன்றிக்காய்ச்சல் மீண்டும் தமிழகத்தின் தலை தூக்க தொடங்கியுள்ளது. கோவையில் இதுவரை 2  பேருக்கு பன்றி காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 13 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் ராஜகோபாலன் தெரிவித்துள்ளார். இது  ஒட்டுமொத்த தமிழகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எச்1 என்1 என்ற கிருமி சளி காய்ச்சல்  அல்லது பன்றிக்காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. இது உயிர்க்கொல்லி நோயாக உள்ளது.  இது ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவருக்கு தொற்றக் கூடிய நோயாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்த நோய் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பன்றி காய்ச்சல் முதலில் பரவியது. பின்னர் அது அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா கண்டத்திற்கும் பரவியது. இந்த காய்ச்சல் காரணமாக மெக்சிகோவில் மட்டும் 1514 பேர் பாதிக்கப்பட்ட 149 பேர் பலியாகினர். பிரேசில், இஸ்ரேல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இந்த நோய் பரவி வருகிறது. இந்த நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் இந்த நோய் பரவுகிறது. கடுமையான காய்ச்சல், இரைப்பு, இருமல், தொண்டை அழற்சி, தலைவலி, தசைநார் வலி, களைப்பு, பலவீனம், தொண்டை புண், இருமல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை இக்காய்ச்சலின் அறிகுறியாக உள்ளது. மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படுவது இந்த நோயின் பாதிப்பாக உள்ளது. பன்றிக்காய்ச்சல் தாக்கியவர்களுக்கு டாமி புளு, ரிலின்ஸா ஆகிய மாத்திரைகள் அளிக்கப்படுகிறது.  இந்த நோய் தாக்கிய 48 மணி நேரத்துக்குள் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது 5 முதல் 7 நாட்கள் வரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்தக் காய்ச்சலில் இருந்து மக்களைக் காப்பதற்கான தடுப்பு ஊசி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, அதற்கான முயற்சிகள் பல நாடுகள் இறங்கியுள்ளன அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் போன்றவை இதன் தடுப்பு முறையாக இருந்து வருகிறது. உலகச் சுகாதார நிறுவனம் பன்றிக் காய்ச்சலை கொள்ளை நோயாகவும் அறிவித்துள்ளது. சித்த மருத்துவத்தின் மூலமும் இதற்கு சிகிச்சை பெறலாம். கடந்த சில ஆண்டுகளாக இந்த நோயின் தாக்கம் தமிழகத்தில் குறைந்திருந்த நிலையில், தற்போது இதன் அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. கோவையில் பீளமேடு பகுதியை சேர்ந்த 68 வயது பெண், ஆர்எஸ் புரத்தைச் சேர்ந்த 63 வயது பெண் ஆகியோருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே கோவை மாநகராட்சியில் தடுப்புப் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளதாகவும், கேரளாவில் இதன் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் அங்கிருந்து தீபாவளிக்கு உறவினர்கள் வீட்டிற்கு வந்ததால் அதன் மூலம் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதேபோல் பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 13 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்படும் வரை இந்த 13 பேரும் வெளியில் நடமாடா வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் தற்போது பன்றிக் காய்ச்சல் தொடங்கியிருப்பது பலரையும் கலக்கம் அடைய செய்துள்ளது. இந்த 2 தொற்று நோய்களுக்கும்  ஒரே மாதிரியான நோய் தடுப்பு முறைதான் என்பதால் அனைவரும் முழுக்க வாசம் அணிவது, கைகளைக் கழுவுதல் போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சளி, இருமல் தொண்டைவலி, காய்ச்சல் போன்றவை தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ளவும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. 
 

click me!