குடிமகன்களுக்கு வந்து விட்டது இனிப்பான செய்தி... ஆன்லைன் மூலம் வீட்டு வாசலுக்கே வரும் மதுபானம்.!!

By Thiraviaraj RMFirst Published Feb 23, 2020, 8:28 AM IST
Highlights

மத்தியபிரதேசம் அரசாங்கம் குடிமகன்களுக்கு வாசல் கதவை திறந்து விட்டிருக்கிறது.அந்த அரசாங்கம் ஆன்லைன் மூலம் மதுபானம் வழங்கப்படும் என அறிவித்திருப்பதால், குடிமகன்கள் ஏக சந்தோசத்தில் இருக்கிறார்கள்.வீட்டு வாசலுக்கே மதுபானம் கிடைக்கும் என்பதால் வெளிநாடு சரக்கு அடிக்க இனி பாருக்கு நோசொல்லிடலாம் என்கிற குஷியில் இருக்கிறார்கள் பெரிய முதலாளிகள்.இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. 
 
  T.Balamurukan

மாநில அரசு வருவாயை அதிகடிக்கும் பொருட்டு 2544 நாட்டு மதுபானக்கடைகளும்,1061 வெளிநாட்டு மதுபானக்கடைகளும் இயங்கி வருகின்றது.2020-21ம் ஆண்டிற்கான கலால் வருவாயில் மாற்றம் செய்ய முந்தைய ஆண்டை விட மொத்த மதிப்பில் 25 சதவீதம் அதிகப்படுத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.வெளிநாட்டு மதுபானங்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும்.அந்த பாட்டில்களில் நிறுவப்பட்டுள்ள 'பார்கோடு' தவிர பாட்டிலை கண்காணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும்.2020ம் ஆண்டுக்கான கலால் கொள்கையில் 21 நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கடைகள் திறக்க ஈ டெண்டர் கம் ஏல முறையில் நிறைவேற்றப்படும்.உள்நாட்டு ,வெளிநாட்டு மதுக்கடைகளின் கிளைகள் எங்கும் திறக்கப்படமாட்டாது. மாநிலத்தில் போபால்,இந்தூர்,குவாலியர்,ஜபல்பூர் அகிய 4 இடங்களில் மட்டுமே இதற்கான கடைகள் இயங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் திராட்சை விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்கும்,திராட்சை விவசாயத்தை ஊக்கப்படுத்துவதற்கும் ,திராட்சையில் இருந்து எடுக்கப்படும் மதுபானத்தை ஊக்கப்படுத்துவதற்காக சுற்றுலா இடங்களில் 15 புதிய விற்பனை மையங்கள் திறக்கப்படும். இந்த வீற்பனை நிலையங்களின் ஆண்டுக்கட்டண்ம் பத்தாயிரம் ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மாநிலத்தை காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. இந்த திட்டத்தை எதிர்த்து கழுவி,கழுவி ஊற்றி வருகிறது பாஜக.

click me!