ரஜினியை வைத்து குடுமிப்பிடி சண்டை: புயலாம் மரமாம் ஆதாயமாம்... கலாய்க்கும் எஸ்.வி. சேகர்!

 
Published : Jan 03, 2018, 05:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
ரஜினியை வைத்து குடுமிப்பிடி சண்டை: புயலாம் மரமாம் ஆதாயமாம்... கலாய்க்கும் எஸ்.வி. சேகர்!

சுருக்கம்

sve sekar criticises rajinis entry and gurumurthys comment

2017ம் ஆண்டின் கடைசி நாளில் தன் புத்தம் புதிய ஆசையைச் சொல்லி, அதிரடி அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அவரது அரசியல் கருத்துக்கு பல்வேறு மட்டத்திலும் ஆதரவும் எதிர்ப்பும் சரிசமமாய்க் கலந்து வெளியாகி வருகின்றன. 

இந்நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு குறித்து பத்திரிகையாளர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி ஒரு கருத்து தெரிவித்திருந்தார். 

ரஜினி அரசியலுக்கு வந்தால், பல கட்சிகள் காணாமல் போய் விடும் என்று கூறியிருந்தார் குருமூர்த்தி. அவரது இந்தக் கருத்தை விமர்சனம் செய்துள்ளார் நடிகரும் பாஜக., பிரமுகருமான எஸ்.வி.சேகர். 

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், 

A WRONG STRATEGY👎. பெரிய புயலில் சவுக்கு மரங்களோடு சந்தன மரங்களும் வீழும். அதில் நாம் வளர்க்கும் மரங்களும் அடங்கும்.இதனால் புயலுக்கு எந்த ஆதாயமும் கிடைக்காது. சேதாரம் மட்டுமே மிஞ்சும்.
- என்று கூறியிருந்தார். 

ஏற்கெனவே, ஆடிட்டர் குருமூர்த்தி குறித்து விமர்சித்து வரும் எஸ்.வி.சேகர், இந்த டிவிட்டிலும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதற்கு எதிர்வினையாக, சிலர் தங்கள் கருத்துப் பதிவுகளைச் செய்து வருகின்றனர். 

அவர்களில் ஒருவர்,  அப்போ என்ன சார் சொல்ல வர்றிங்க , mafia , கட்ட பஞ்சாயத்து , திராவிட திருட்டு அரசியல இருக்கணும்னு சொல்றிங்களா ADMK , DMK , TTDV இதுதான் choice எ ? போட்டு மொத்த தமிழ் நாட்டையும் வித்துடலாமா? நீங்களே support பண்ணல நா எப்படி ? எதுக்கு இந்த காழ்ப்புணர்ச்சி ? திடீர் பல்டி - என்று கேட்டுள்ளார். 

அதுபோல்  இன்னொரு ரஜினி ரசிகர், வலுவிழப்பதற்குள் மக்களின் தேவையை பூர்த்தி செய்து விடும். அப்படி வலுவழந்தாலும் தமிழகத்திலேயே இருந்து மீண்டும் புயல் உருவெடுக்க வெகு நேரம் ஆகாது... என்று கூறியுள்ளார். 

ஒருவர் தனது வித்தியாசமான பார்வையை முன்வத்துள்ளார். கமல் கட்சி தொடங்கப் போகிறார் என்று சொல்லி வருகிறார். ஆனால், அவர் கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் அமைதியாகிவிட்டார். ஆனால் இப்போது ரஜினி வாய்திறந்திருக்கிறார். கமலுக்கு ஆதரவாக டிவிட்டரில் பதிவுகள் போட்டார் எஸ்.வி.சேகர். எனவே கமலுக்கு ஒரு ஓட்டு நிச்சயம் என்று எஸ்வி.சேகரை குறிப்பிட்டு வலைத்தளத்தில் கருத்திட்டார்கள். 
அதை ஒருவர் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார். .. ஆயிரம் இருந்தாலும் உலக நாயகனை நினைத்து வேதனைப்படுவது புரிகிறது!
ஆனா உங்க ஒர் ஓட்டு உலக நாயகனுக்கு இழப்புதான்!” என்று! 

ரஜினி வரவை புயலுக்கு ஒப்புவது தவறு.  குருமூர்த்தி ரஜினியை புயலுக்கு ஒப்பிடவில்லை.  சேகர் உங்களுக்கு ரஜினியால் பாஜக பாதிக்கப்பட்டு விடுமோ என்று பயம்.  எனக்கு என்னவோ நீங்கள் பாஜக வில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது - என்று ஒருவர், ரஜினி வரவால் பாஜக.,வுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும் என்று நீங்கள் பயப்படுகிறீர்கள். அதனால் தான், நாம் வளர்க்கும் மரங்கள் என்று பாஜக.வையும் கமலஹாசனையும் குறிப்பிடுகிறீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

உங்களுக்கு அப்படி என்றால் ஒரு நல்ல காலமே தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்று எண்ணமா?என்ன சார் எல்லாவற்றையும் திட்டிக்கொண்டு அலைகிறீர்களே,கழகமே வந்து (உங்களைப்பொறுத்தவரை திமுக) கொள்ளையடிக்கவேண்டுமா? - என்று ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றத்துக்கு ரஜினி நிச்சயம் வழிகாட்டுவார் என்று குறிப்பிட்டுள்ளார். 

ரஜினியை வைத்து இப்போது அரசியல் மட்டத்திலும், சமூக வலைத்தள மட்டங்களிலும் குடுமிப் பிடிச் சண்டை கோலோச்சுகிறது என்பது மட்டுமே நிஜம். 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!