ரஜினிக்கு டைம் ஒதுக்கிய கருணாநிதி...! மூத்த அரசியல்வாதியை சந்தித்து ஆசி பெறுகிறார் சூப்பர் ஸ்டார்..! 

 
Published : Jan 03, 2018, 04:57 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
ரஜினிக்கு டைம் ஒதுக்கிய கருணாநிதி...! மூத்த அரசியல்வாதியை சந்தித்து ஆசி பெறுகிறார் சூப்பர் ஸ்டார்..! 

சுருக்கம்

Actor Rajinikanth has announced that the party will start at 7.30 pm today to meet DMK chief Karunanidhi.

கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், இன்று இரவு 7. 30 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க உள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 31 ஆம் தேதி புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். நீண்ட நாட்களாக  அரசியலுக்கு வருவதாக போக்கு காட்டி வந்த  ரஜினிகாந்த், தற்போது தான் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார்.

அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் பிதிய கட்சி தொடங்கி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்தார். ஆன்மீகம் கலந்த அரசியலே தனது நிலைப்பாடாக இருக்கும் எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ஆன்மீகம் கலந்த அரசியல் என்பது சரியான நிலைப்பாடு இல்லை  என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார். இதே போன்று அரசியலில் ஆன்மீகத்தை கலப்பது தவறாக போய் முடியும் என டி.டி.வி.தினகரன் கூறினார்.

ஆனாலும் ஆன்மீகம் கலந்த அரசியல் குறித்து விளக்கமளித்த ரஜினிகாந்த், உண்மை, உழைப்பு, உயர்வு போன்ற லட்சியத்துடன் செயல்படப்போவதாகவும் தனது அரசியல் பாதை அறவழியில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் , இன்று இரவு 7.30 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறவுள்ளார். இதையொட்டி அவர் இன்று மாலை கோபாலபுரம் இல்லம் செல்கிறார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!