அடுத்த ஜனாதிபதி சுஷ்மா சுவராஜ்? போட்டியின்றி தேர்வாக பா.ஜ.க. மாஸ்டர் பிளான்

 
Published : Jun 16, 2017, 06:58 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
அடுத்த ஜனாதிபதி சுஷ்மா சுவராஜ்?  போட்டியின்றி தேர்வாக பா.ஜ.க. மாஸ்டர் பிளான்

சுருக்கம்

susma swaraj may soon be the President of India

இந்தியாவின் முதல் குடிமகனை தேர்ந்தெடுக்கும் படலம் வெகு ஜோராகத் தொடங்கிவிட்டது.

பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.இதனைத் தொடர்ந்து 14 வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது.

முதல் முறையாக குடியரசுத் தலைவர் தேர்தலை பெரும்பான்மை பலத்தோடு சந்திக்கும் பா.ஜ.க., இதனை மிகப் பெரும் கவுரப் பிரச்சனையாகவே பார்க்கிறது. தான் முன்னிறுத்தும் வேட்பாளருக்கே ராஷ்டிரிபதி பவன் செல்ல வேண்டும் என்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் மிகத் தீவிரவமாக பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை என்று பிரணாப்முகர்ஜி கருத்து தெரிவித்த அடுத்த நிமிடமே, உத்தேச வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. தயாரித்துவிட்டது. அதில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் திரெளபதி முர்மு , உள்ளிட்ட பலரது பெயர்கள் அடங்கிய கோப்பு பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா வசம் ஒப்படைக்கப்பட்டன.

இதில் சுமித்ரா மகாஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் திரெளபதி ஆகிய இரண்டு பெயர்களை அந்த லிஸ்ட்டில் இருந்து மோடியும் அமித்ஷாவும் முதற்கட்டமாக தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.தேர்தல் நெருங்கும் போது எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை அறிந்த பின்னர் வேட்பாளரை இறுதி செய்யலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டதை அடுத்து சுமித்ராவும், முர்முவும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

பா.ஜ.க.வின் எந்திர தந்திர நடவடிக்கைளை கூர்ந்து கவனித்து வந்த காங்கிரஸ் கட்சி, எதிர்வரும் மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற கட்சிகளை குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக ஓரணியில் ஒன்றிணைத்தது.

பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் என வடக்கில் வலுவாகவும், தெற்கில் திமுகவையும் இணைத்துக் கொண்டு பலம் காட்டியது.திமுக தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்தநாள் மற்றும் சட்டப்பேரவை வைர விழாவில் கலந்து கொண்ட மதச்சார்பற்ற கூட்டணித் தலைவர்கள் அனைவரும், குடியரசுத் தலைவர் தேர்லை கருத்தில் கொண்டு பா.ஜ.க.வை வறுத்தெடுத்தனர்.

மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்காக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் பல முறை உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது பா.ஜ.க.வுக்கு நெருக்கடி கொடுக்க நாடு முழுமைக்கும் அறிந்த ஒருவரை முன்னிறுத்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிகிறது. முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமா், காந்தியின் பேரன் கோபால்காந்தி ஆகியோர் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் களமிறக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகின.

காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற அணிகளின் முழக்கம் உத்திரப்பிரதேசத்தைத் தவிர்த்து ஏனைய அனைத்து மாநிலங்களிலும் வலுவடையத் தொடங்கிய நிலையில், சண்டை வேண்டாம், சமாதானம் பேசுவோம் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் பா.ஜ.க மூவர் குழுவினர்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெங்கையாநாயுடு பா.ஜ.க.தேசியத் தலைவர் அமித்ஷா ஆகியோர்  காங்கிரஸ் தேசியத் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் தாங்கள் முன்னிறுத்தும் வேட்பாளரை போட்டியின்றி தேர்ந்தெடுக்க ஆதரவு அளிக்கும் படி கோரிக்கை விடுத்தனர். ஆனால் சோனியா  காந்தியோ, முதலில் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள வேட்பாளரது பெயரை அறிவியுங்கள். ஆதரவு அளிப்பது குறித்து பின்னர் பேசிக் கொள்ளலாம் என்று வெளிப்படையாகவே பேசிவிட்டாராம். 

இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் பா.ஜ.க. மூவர் குழுவினர் சந்தித்து பேசியுள்ளனர். யெச்சூரியின் வீட்டுக்கு வருவதற்கு முன்பே காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து தகவல் பறந்து சென்றதாம். “முதலில் வேட்பாளரின் பெயரை அறிவிக்கச் சொல்லுங்கள் என்று”

எதிர்க்கட்சிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு ஒன்று கூடிய பா.ஜ.க. தலைவர்கள் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்று ஆலோசித்துள்ளார்கள். அப்போது முதலில் பரிசீலிக்கப்பட்டவர் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன். அவையை சுமூகமாக நடத்தும் வித்தையை இவர் கற்றிருந்தாலும் ஏதோ மிஸ்சிங் என்று கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள் விவாதித்துள்ளார்கள் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

இரண்டாவதாக ஜார்க்கண்ட் ஆளுநர் திரெளபதி முர்மு பெயர் வந்தது. கல்லூரிப் பருவத்தில் இருந்தே சமூக அக்கறை கொண்டிருந்தவர், கொண்டிருக்கிறவர். கவுன்சிலர் பதவியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக உயர்ந்தவர். நவீன்பட்நாயக்கின் அரசில் அமைச்சராக பதவி வகித்தவர், குறிப்பாக பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் என முழுமையாக ஆலோசிக்கப்பட்டது. திரெளபதி முர்மு, சிறந்த அரசியல்வாதியாக இருந்தாலும், நாடு முழுமைக்கும் தெரிந்தவர் அல்லவே என்ற கருத்தும் அப்போது முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. நாம் முன்னிறுத்தும் வேட்பாளரை எதிர்க்கட்சியால் நிராகரிக்க முடியாத அளவுக்கு வலுவான, ஆளுமைமிக்க, நற்பண்புகள் நிறைந்த, குறிப்பாக நாடு முழுவதும் பரீட்சியமான ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஒரு பிரேமுக்குள் இறுதியாக ஆலோசனை வந்தடைந்து.

இந்த பிரேமுக்குள் பொருந்தி இருக்கக் கூடிய அத்தனை பண்புகளும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடமும் இருக்கிறது. ஏன் அவரை நாம் முன்னிறுத்தக் கூடாது என்று சிலர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். சுஷ்மாவா..! சும்மா இருங்க… என்ற பேச்சு அப்போது எழவில்லை…..

பா.ஜ.க.வின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்…..

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்